வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி ராட்டடோலி பிரஞ்ச் ஸ்கில்லட்

Photo of Spicy Ratatouille Brunch Skillet by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
265
3
5.0(0)
0

ஸ்பைசி ராட்டடோலி பிரஞ்ச் ஸ்கில்லட்

Aug-13-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி ராட்டடோலி பிரஞ்ச் ஸ்கில்லட் செய்முறை பற்றி

ஸ்பைசி ராட்டடோலி பிரஞ்ச் ஸ்கில்லட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரெஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை - 4
  2. குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது
  3. கத்திரிக்காய் பெரியது - 1/2 பொடியாக நறுக்கியது
  4. சுக்கினி - 1 பொடியாக நறுக்கியது
  5. பாலக்கீரை - 5-6 இலைகள்
  6. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  7. தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
  8. பூண்டு - 3 பல் இடித்தது
  9. தக்காளி பேஸ்ட் - 4-5 தேக்கரண்டி
  10. சில்லி சாஸ் - 2-3 தேக்கரண்டி
  11. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  12. ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
  13. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயை வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், சுக்கினி , கத்திரிக்காய் , குடைமிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  2. பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
  3. இப்பொழுது நறுக்கிய தக்காளி , தக்காளி பேஸ்ட் , தட்டிய பூண்டு பல் , ஸ்பைசி சில்லி சாஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. நான்கு முட்டையை கடாயின் ஓரத்தில் உடைத்து ஊற்றவும். இறுதியாக பாலக்கீரயை சேர்க்கவும் .
  5. கடாயை மூடிவைத்து முட்டை வேகும் வரை சிம்மில் வைத்து வேகவிடவும்.சுவையான ஸ்பைசி ராட்டடோலி பிரஞ்ச் ஸ்கில்லட் தயார்.
  6. முட்டை இருக்கும் பகுதியை கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்