வீடு / சமையல் குறிப்பு / ஈஸீ சிக்கன் பிரியாணி

Photo of EASY CHICKEN BIRIYANI:yum::yum: by Mallika Udayakumar at BetterButter
335
0
0.0(0)
0

ஈஸீ சிக்கன் பிரியாணி

Aug-14-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸீ சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யலாம் வாங்க .சீரக சம்பா அரிசியில் மிகவும் ருசியாக இருக்குமுங்க:blush:

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அரிசி-2காப்படி
  2. சிக்கன் 1/2 கிலோ
  3. பட்டை,கிராம்பு-சிறிது
  4. பெரிய வெங்காயம்-2
  5. பிரியாணி இலை-2
  6. தக்காளி-1
  7. பச்சை மிளகாய்-6-9
  8. மிளகாய் தூள்-1-2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள்
  10. கருவேப்பிலை
  11. இ.பூவிழுது -3-4,டீஸ்பூன்
  12. நெய்-1டீஸ்பூன்
  13. எண்ணெய் -5டீஸ்பூன்
  14. மல்லி-புதினா-2கை(அரைத்து)
  15. தயிர்- எலுமிச்சை- 1கப்
  16. தேங்காய் -2கை
  17. சோம்பு-1டீஸ்பூன்
  18. கசகசா-1டீஸ்பூன்
  19. தண்ணீர்
  20. உப்பு

வழிமுறைகள்

  1. சீரக சம்பா அரிசி அளக்கவும்.பிறகு ஒரு அலசு அலசிய பின் அதை தண்ணீர் இல்லாமல் வடித்து மூடிவைக்கவும்.
  2. படத்தில் உள்ளது போல எடுத்து வைக்கவும்
  3. தயிர்,எலுமிச்சை
  4. இஞ்சி-பூண்டு தனியாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய்,சோம்பு,கசகசா,முந்திரி இதை தனியாக அரைத்து தேங்காய் பால் மீடியம் திக்காக எடுத்து வைக்கவும்.
  5. பெரிய குக்கரில் நெய் ,எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலையை போடவும்.
  6. இதனை தனியாக எடுது வைக்கவும் கறி சேர்க்கும்போது தான் அரைக்க வேண்டும்.(இல்லை என்றால் கலர் மாறிவிடும்).
  7. கறியை கழுவி வைக்கவும்.
  8. பின்னர் 2 உள்ள அனைத்தையும் சேர்த்து,இ.பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஃப்ரை செய்யவும்.
  9. பின்னர் வனங்கியதும் தக்காளி ,மல்லி- புதினாவை உடனே அரைத்து ஊற்றவும், சிக்கனை சேர்க்கவும்,உப்பு சேர்க்கவும்.
  10. தயிர்-எலுமிச்சை பிழியவும்.
  11. குக்கரை ஒரு தட்டால் மூடி வேக விடவும்
  12. நன்கு தண்ணீர் சுன்டியவுடன்
  13. களைந்த அரிசியை சேர்க்கவும்
  14. ஒரு கலக்கு கலக்கியவுடன்
  15. எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை அரிசி:தேங்காய்பால்மற்றும் தண்ணீர் 1:2 என்ற கணக்கில் ஊற்றவும்
  16. இரண்டு விசில் மிதமான தீயில் வைத்து ...சமைத்தால்
  17. அருமையான வீட்டு சிக்கன் பிரியாணி தயார்.
  18. அன்பாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்