வீடு / சமையல் குறிப்பு / தால் கோஃப்தா

Photo of Dal kofta by Krishnasamy Vidya Valli at BetterButter
374
0
0.0(0)
0

தால் கோஃப்தா

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தால் கோஃப்தா செய்முறை பற்றி

பனீர் அல்லது பிரட் வைத்து கோஃப்தா செய்வது வழக்கம் .ஆனால் இது வித்தியாசமாக எல்லா பருப்புகளும் சேர்ந்து கோஃப்தா செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை பச்ச பயறு ராஜ்மா பட்டாணி சோயா பாசிப்பருப்பு காராமணி மற்றும் விருப்பமான கடலை & பருப்புகள் சேர்த்து 1/2 கப்
  2. உப்பு அரை தேக்கரண்டி
  3. காஷ்மீரி சில்லி பவுடர் மஞ்சள் பொடி ஆம்சூர் பொடி கரம் மசாலா தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி ஆகியவை தலா கால் தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  5. டீப்பிரை அல்லது ஷாலோபிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்
  6. கிரேவிக்கு தேவையானவை
  7. வெங்காயம் ஒன்று
  8. தக்காளி-2
  9. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. உப்பு அரை தேக்கரண்டி
  11. காஷ்மீரி சில்லி பவுடர் மஞ்சள் பொடி ஆம்சூர் பவுடர் கரம்மசாலா தனியா பொடி சீரகப் பொடி கால் தேக்கரண்டி
  12. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  13. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  14. தாளிக்க தேவையானவை
  15. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  16. பட்டை ஒரு சிறிய துண்டு
  17. ஏலக்காய் கிராம்பு தலா 2
  18. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  19. பாதம் 6 முதல் 8

வழிமுறைகள்

  1. கடலை மற்றும் பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் குழைய வேக வைத்துக்கொள்ளவும்
  2. மிக்ஸியில் ஒரு சுத்து அரைத்து கொள்ளவும்
  3. அதோடுஉப்பு மற்றும் எல்லா பொடிகள் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
  4. எண்ணெயில் இந்த உருண்டைகளை ஷாலோபிரை அல்லது டீப்பிரை செய்து எடுத்துக் கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. எல்லாவற்றையும் சிறிது ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  8. மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  9. உப்பு மற்றும் எல்லா பொடிகள் கசூரி மேத்தி சேர்த்து ஒரு கொதி விடவும்
  10. செய்து வைத்த உருண்டைகளை கிரேவியில் போடவும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
  11. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்