வீடு / சமையல் குறிப்பு / கேசர் பிஸ்தா மலாய் குல்ஃபி

Photo of Kesar Pista Malai Kulfi by Hameed Nooh at BetterButter
524
4
5.0(0)
0

கேசர் பிஸ்தா மலாய் குல்ஃபி

Aug-14-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கேசர் பிஸ்தா மலாய் குல்ஃபி செய்முறை பற்றி

குங்குமப்பூ மற்றும் பாதாம் பிஸ்தாவை கெட்டியான பாலோடு க்ரீம் சேர்த்து தயாரித்த சுவையான குல்ஃபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் 2 லிட்டர்
  2. க்ரீம் கால் கப்
  3. சர்க்கரை சுவைக்கேற்ப
  4. பொடித்த பிஸ்தா பாதாம் அரை கப்
  5. குங்குமப்பூ ஒரு தேக்கரண்டி
  6. ஏலக்காய்த் தூள் அரை தேக்கரண்டி
  7. ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி
  8. கண்டென்ஸ்ட் மில்க் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்
  2. பால் கொதித்ததும் கிரீம் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக சுண்டும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
  3. பால் பாதி அளவாக மாறும் வரை நன்றாக கைவிடாமல் காய்ச்சிக் கொண்டே இருக்கவும்.
  4. குங்குமப்பூவை சிறிது பாலோடு சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  5. பிறகு சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் பாலை சுண்ட விடவும்
  6. இனி குங்குமப்பூ கலவையும் பொடித்த பிஸ்தா பாதாம் ஏலக்காய்தூள் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
  7. இனி பாலை முழுவதுமாக ஆற வைத்து குல்ஃபி மோல்டில் ஊற்றி நன்றாக காற்று புகாத வண்ணம் மூடி 6 மணி நேரங்கள் உறைய வைக்கவும்.
  8. நன்றாக உறைந்ததும் மோல்டை சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் வைத்து எடுத்தால் இலகுவாக வெளியே வந்துவிடும்.
  9. இனி பொடித்த பிஸ்தா பாதாம் மற்றும் குங்குமப்பூவை தூவி சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்