BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்ஸ் கிரேவி

Photo of Soya chunks gravy by Sharmiley Ravi at BetterButter
0
0
0(0)
0

சோயா சங்ஸ் கிரேவி

Aug-14-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்ஸ் கிரேவி செய்முறை பற்றி

soya chunks புரதம் மிகவும் அதிகமாக உள்ளது. இது மிகவும் எளிமையான ரெசிபி. குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு சாப்பாடு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயா சங்க்ஸ் ஒரு கப்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. துருவிய தேங்காய் அரை கப்
  4. சோம்பு 2 டீஸ்பூன்
  5. தயிர் அரை கப்
  6. பட்டை சிறு துண்டு
  7. கிராம்பு-2
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 2
  10. வெங்காயம் 2
  11. தக்காளி ஒன்று
  12. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  13. தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  14. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  15. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  16. கொத்தமல்லிதழை கையளவு

வழிமுறைகள்

  1. சோயா கொதிக்கும் வெந்நீரில் உப்பு போட்டு நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. அரை கப் தயிரில் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்
  3. அனைத்து தூள்களையும் கலந்து வைத்துள்ள தயிரில் ஊற வைத்துள்ள சோயாவை சேர்த்து நன்றாக தண்ணீரை எடுத்து பிழிந்து விட்டு அதில் போட்டு நன்றாக ஊறவிடவும்
  4. மிக்ஸியில் அரைக்கப் தேங்காயுடன் பட்டை சோம்பு கிராம்பு போன்ற மசாலா பொருட்களை நன்றாக தெரிந்து கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி மற்றும் சிறிதளவு பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்
  6. தக்காளி நன்றாக வெந்தவுடன் அதன் மேல் தயிரில் ஊற வைத்த சோயாவை போட்டு சிறிது நேரம் வதக்கவும்
  7. ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்
  8. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்