வீடு / சமையல் குறிப்பு / கடாய் பன்னீர்

Photo of Kadai paneer by Krishnasamy Vidya Valli at BetterButter
874
0
0.0(0)
0

கடாய் பன்னீர்

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடாய் பன்னீர் செய்முறை பற்றி

பனீர் பட்டர் மசாலாவிற்கு அடுத்தபடியாக கிரேவியில் இடம் பிடிப்பது இந்த கடாய் மசாலா. பிரஷாக கடாய் மசாலா பொடி செய்து போடுவது அதன் கூடுதல் சுவைக்கு காரணம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் 15 முதல் 20 துண்டுகள்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. குடைமிளகாய் சிறியது 1
  5. பச்ச பட்டாணி 1/8 கப்
  6. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  7. பிரஷ் க்ரீம் 1/4 கப் (விருப்பப்பட்டால்)
  8. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  9. உப்பு அரை தேக்கரண்டி
  10. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  12. கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி
  13. மிளகு சீரகம் தலா 1/4 தேக்கரண்டி
  14. காஷ்மீர் சில்லி -1 அல்லது 2
  15. பட்டை -1 சிறிய துண்டு
  16. ஏலக்காய் கிரம்பு தலா 1
  17. தாளிக்க தேவையானவை
  18. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  19. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  20. சீரகம் கால் தேக்கரண்டி
  21. பட்டை சிறிது ஏலக்காய் கிராம்பு தலா 1
  22. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பாதியளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சிறிது ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. குடை மிளகாய் பச்ச பட்டாணி சேர்த்து வதக்கவும்
  7. அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  8. உப்பு மஞ்சள் பொடி மற்றும் வறுத்து பொடித்து வைத்ததை சேர்த்து கிளறவும்
  9. பனீர் (விருப்பப்பட்டால் பிரஷ் கிரீம்) சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  10. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்