வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸடு தானிய மினி ஊத்தப்பம்

Photo of Mixed dhaniya mini uthappam by Krishnasamy Vidya Valli at BetterButter
343
0
0.0(0)
0

மிக்ஸடு தானிய மினி ஊத்தப்பம்

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸடு தானிய மினி ஊத்தப்பம் செய்முறை பற்றி

புரத சத்து நிறைந்த ஆரோக்கியமான டிபன் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் 3 நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டகடலை பச்ச பயறு மொச்சை, சோயா ராஜ்மா மற்றும் விருப்பப்பட்ட கடலை பயறு வகைகள் 1/2 கப்
  2. தோசை மாவு 6 குழம்பு கரண்டி
  3. வெங்காயம் 1
  4. தக்காளி -1
  5. குடைமிளகாய் பொடியாக நறுக்கியது 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு 3/4 தேக்கரண்டி
  7. கடலை மாவு -1 தேக்கரண்டி
  8. இட்லி மிளகாய் பொடி/பருப்பு பொடி/எள்ளு பொடி/காரப்பொடி 1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1 தேக்கரண்டி
  13. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தானியங்களை 2 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. வேகவைத்த தானியங்கள் சேர்த்து கிளறவும்
  5. உப்பு இட்லி மிளகாய் பொடி கடலைமாவு சேர்த்து கிளறவும்
  6. கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்
  7. தோசை கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு விட்டு அதன்மேல் செய்துவைத்த தானிய மசாலாவை ஸ்பிரட் செய்யவும்
  8. ஒருபுறம் வெந்ததும் திருப்பி போடவும்
  9. சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்