வீடு / சமையல் குறிப்பு / அரைகீரை தேங்காய் பால் கூட்டு

Photo of Araikeerai coconut milk kootu by Yasmin Shabira at BetterButter
432
0
0.0(0)
0

அரைகீரை தேங்காய் பால் கூட்டு

Aug-14-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரைகீரை தேங்காய் பால் கூட்டு செய்முறை பற்றி

உடலுக்கு உறுதி தரும் புரதச்சத்து நிறைந்த அரைகீரை கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைகீரை : 1 கட்டு
  2. தேங்காய் பால் : 2 கப்
  3. சின்ன வெங்காயம் : 1 கப்
  4. சிவப்பு மிளகாய் : 2
  5. கடுகு : 1/2 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம் : 1/2 தேக்கரண்டி
  7. உளுந்து : 1/2 தேக்கரண்டி
  8. ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
  9. தேங்காய் துறுவல் : 2 மேசைக்கரண்டி
  10. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், உளுந்து சேர்க்கவும்
  2. கடுகு வெடித்ததும் சிவப்பு மிளகாயை லேசாக தீயில் காட்டி சுட்டு சேர்க்கவும்
  3. நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் நன்றாக சுத்தம் செய்து நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தேவையான அளவு உப்பு, ஜீரகதூள், சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேங்காய் பாலை ஊற்றி வேக விடவும். மூடி போட கூடாது
  7. நன்றாக வெந்து வற்றியதும் தேங்காய் துறுவல் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்