கீமா மட்டர் | KHEEMA mutter in Tamil

எழுதியவர் Subashini Krish  |  14th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of KHEEMA mutter by Subashini Krish at BetterButter
கீமா மட்டர்Subashini Krish
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

கீமா மட்டர் recipe

கீமா மட்டர் தேவையான பொருட்கள் ( Ingredients to make KHEEMA mutter in Tamil )

  • மட்டன் கொத்துக்கறி கால் கிலோ
  • பச்சை பட்டாணி 200 கிராம்
  • பெரிய வெங்காயம் ஒன்று
  • பழுத்த தக்காளி ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  • வர மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  • உப்பு ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
  • எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  • கொத்தமல்லி தழை அலங்கரிக்க

கீமா மட்டர் செய்வது எப்படி | How to make KHEEMA mutter in Tamil

  1. கொத்துக்கறியை உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து 5 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பச்சை பட்டாணியையும் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி விழுது ,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து கிளறவும்
  6. நன்கு வதங்கிய பின் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்
  7. குறைந்த தீயில் எண்ணெய் வெளியே வரும் வரை வேக விடவும்
  8. இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
  9. நான் சூடான புசுபுசு பூரிகளுடன் பரிமாறினேன்

எனது டிப்:

பட்டாணி சேர்க்காமலும் செய்யலாம்

Reviews for KHEEMA mutter in tamil (0)