வீடு / சமையல் குறிப்பு / ரோட்ஸைட் பட்டாணி சுண்டல்

Photo of Road side peas sundal by Krishnasamy Vidya Valli at BetterButter
656
0
0.0(0)
0

ரோட்ஸைட் பட்டாணி சுண்டல்

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோட்ஸைட் பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

என்னதான் வெரைட்டியாக ஸ்நாக்ஸ் வீட்டில் செய்தாலும் குழந்தைகள் எப்பொழுதும் மாலையில் ரோட்டோரம் தள்ளு வண்டியில் வரும் பட்டாணி சுண்டலை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை வீட்டில் எளிதில் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டாணி -1/2 கப்
  2. தேங்காய் துருவல் 1/8 கப்
  3. மாங்காய் பொடியாக நறுக்கியது 1/8 கப்
  4. தக்காளி 1
  5. வெங்காயம் 1
  6. உப்பு அரை தேக்கரண்டி
  7. காரப் பொடி கால் தேக்கரண்டி
  8. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  9. தனியா பொடி கால் தேக்கரண்டி
  10. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  11. தாளிக்க தேவையானவை
  12. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  13. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் 4 சிட்டிகை
  15. மிளகாய்வற்றல் 1
  16. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பட்டாணியை 2 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி மாங்காய் சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த பட்டாணி சேர்த்து கிளறவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  6. தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்
  7. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்