வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்க்ஸ் பாவ்பாஜி பிரியாணி

Photo of Soya chunks  pavbaji biriyani by Krishnasamy Vidya Valli at BetterButter
257
0
0.0(0)
0

சோயா சங்க்ஸ் பாவ்பாஜி பிரியாணி

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்க்ஸ் பாவ்பாஜி பிரியாணி செய்முறை பற்றி

சோயா சாங்ஸ் மற்றும் காய்கள் வைத்து செய்யும் எளிமையான பிரியாணி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சங்ஸ் 10 முதல் 12
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. காலிஃப்ளவர் பூக்கள் 1/8 கப்
  5. பீன்ஸ் மற்றும் ஸ்வீட்கான் சேர்த்து 1/8 கப்
  6. பாஸ்மதி அரிசி அரை கப்
  7. உப்பு அரை தேக்கரண்டி
  8. பாவ்பாஜி மசாலா 3/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  10. பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  11. தாளிக்கத் தேவையானவை
  12. நெய் அரை தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  14. சீரகம் அரை தேக்கரண்டி
  15. பட்டை ஒரு சிறிய துண்டு
  16. ஏலக்காய் கிராம்பு தலா 2

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. தக்காளி உப்பு மஞ்சள்பொடி பாவ்பாஜி மசாலா சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. சோயா சங்க்ஸை கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் அதனை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  4. காலிஃப்ளவர் பூக்களையும் கொதிக்கும் வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  5. பீன்ஸ் மற்றும் ஸ்வீட்கானை 5 நிமிடம் மைக்ரோ அவனில்/அடுப்பில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. வெந்நீரில் போட்டு எடுத்த சோயா சங்ஸ் காலிஃப்ளவர் பீன்ஸ் மற்றும் ஸ்வீட்கான் எல்லாம் சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்
  9. மசாலா கெட்டியானதும் சாதம் சேர்த்து கிளறவும்
  10. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்