வீடு / சமையல் குறிப்பு / முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

Photo of Dhall cabbage by Hasina Hussain at BetterButter
489
0
0.0(0)
0

முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

Aug-14-2018
Hasina Hussain
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

கடலைப்பருப்பு தேங்காய் பால் சேர்த்த முட்டை கோஸ் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை கோஸ் கால் கிலோ
  2. கடலைப்பருப்பு 50 கிராம்
  3. தேங்காய் ஒரு மூடி பால் எடுக்க
  4. பல்லாரி 1
  5. தக்காளி சிறியது 1
  6. பச்சை மிளகாய் 2
  7. இஞ்சி பூண்டு அரை டீஸ்பூன்
  8. பட்டை ஒரு சிறிய துண்டு
  9. மஞ்சள் தூள் சீரக சோம்புத் தூள் தலா கால் டீஸ்பூன்
  10. சீரகம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கடலைப் பருப்பை குக்கரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விடவும்
  2. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போடவும்
  3. பட்டை வெடித்தவுடன் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை வரிசையாக சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனவுடன் பச்சைமிளகாய் முட்டைகோஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. ஒரு மூடி தேங்காயை முதல் பாலை தனியாக எடுத்து வைத்து விட்டு இரண்டாவது மூன்றாவது பாலையும் ஒன்றாக எடுத்து வைக்கவும்
  6. இரண்டாவது பாலில் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து கலக்கி முட்டைக்கோஸில் ஊற்றவும்
  7. வேகவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்
  8. இப்போது மூடியைத் திறந்து எடுத்து வைத்துள்ள முதல் பாலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  9. முட்டைகோஸ் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்