வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு அல்வா

Photo of Green gram halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
762
0
0.0(0)
0

பச்சைப்பயிறு அல்வா

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு அல்வா செய்முறை பற்றி

பச்சைப்பயிறு வைத்து செய்யும் சிம்பிள் அல்வா இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப் பயிறு கால் கப்
  2. சீனி கால் கப்+ 1/8 கப்
  3. பால் முக்கால் கப்
  4. ஏலப்பொடி 4 சிட்டிகை
  5. பாதாம் 4 முதல் 6 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. நெய் 1/8 கப்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பச்சைப் பயறை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் திரித்து சலித்துக்கொள்ளவும்
  2. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சலித்த மாவை வறுத்துக் கொள்ளவும்
  3. சிறிது ஆறவைத்து பாலில் கரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கரைத்து வைத்ததை சேர்த்து கிளறவும்
  5. சீனி சேர்த்து கிளறவும்
  6. கடாயில் ஒட்டாமல் வரும் நேரத்தில் மீதமுள்ள நெய் ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்
  7. பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்