வீடு / சமையல் குறிப்பு / தாய்லாந்து சோயா பன்னீர் மற்றும் காய்கறி சிவப்பு கறி

Photo of Thai Red Curry - Tofu panner and veg curry by Karuna Pooja at BetterButter
660
1
0.0(0)
0

தாய்லாந்து சோயா பன்னீர் மற்றும் காய்கறி சிவப்பு கறி

Aug-14-2018
Karuna Pooja
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தாய்லாந்து சோயா பன்னீர் மற்றும் காய்கறி சிவப்பு கறி செய்முறை பற்றி

உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதச்சத்து கொண்ட சோயா பனீரை கொண்டு தயாரிக்கப்பட்ட தாய்லாந்து சிவப்பு நிறத்தில் கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா பன்னீர் 200 கிராம்
  2. பச்சை நிற குடைமிளகாய் 1
  3. சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சிறிதாக தலா 1
  4. சிறிய மக்காச்சோளம் 4
  5. 1 ஸ்பூன் மல்லிவிதை
  6. 1ஸ்பூன் மிளகு
  7. சீரகம் ½ ஸ்பூன்
  8. துருவிய எலுமிச்சம் பழத்தின் தோல் 1/2 ஸ்பூன்
  9. லெமன் கிராஸ்-ன் அடிப்பகுதி 1/2 ஸ்பூன்
  10. பெரிய வெங்காயம் 1
  11. மல்லியின் தண்டு பகுதி சிறிதளவு
  12. செர்ரி தக்காளி பழம் 2
  13. உப்பு
  14. கெட்டியான தேங்காய்ப் பால் 1 கப்
  15. சமையல் எண்ணெய் 1 ஸ்பூன்
  16. சிவப்பு மிளகாய் 4
  17. பூண்டு 5 பல்
  18. இஞ்சி 1 " துன்டு

வழிமுறைகள்

  1. சிவப்பு மிளகாயை விதை நீக்கி சுடுநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வீட்டில் வளர்ந்த லெமன்கிராஸ் சிறியதாக இருக்கும் கடைகளில் பெரியதாக இருக்கும் அதை வாங்கி அதன் இறுதிப் பகுதியை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்கவும்
  3. எலுமிச்சையின் தோல் பகுதியை மட்டும் துருவி வைக்கவும்
  4. மல்லியின் தண்டுப் பகுதியை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
  5. பூண்டு ,இஞ்சி ,சீரகம் ,மல்லி மிளகு, மல்லி தண்டு ,சிவப்பு மிளகாய் ,வெங்காயம், லெமன் கிராஸ் , உப்பு ,துருவிய எழுமிச்சை தோல் இவற்றை
  6. விழுதாக அரைக்கவும் (,இதை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிஜில் வைத்து இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.)
  7. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தேவையான அளவு சிவப்புநிற பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  8. விழுதில் என்னை பிரிந்து வந்த பின்பு கெட்டியான தேங்காய்ப் பாலை சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின்னர் காய்கறிகளை சேர்க்கவும்
  10. செர்ரி தக்காளி சேர்த்து வதக்கவும்.
  11. காய்கறிகள் வதங்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  12. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  13. காய்கள் வெந்த பின்பு பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்.
  14. ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்த உடன் இறக்கினால் சுவையான தாய்லாந்து சிவப்பு நிற பன்னீர் கறி தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்