வீடு / சமையல் குறிப்பு / Vattalappam

Photo of Vattalappam by Hasina Hussain at BetterButter
0
0
5(1)
0

Vattalappam

Aug-14-2018
Hasina Hussain
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శ్రీ లంకన్
 • పండుగలాగా
 • ప్రెజర్ కుక్
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. முட்டை 15
 2. தேங்காய்பால் ஒரு தேங்காயில் எடுத்தது
 3. சர்க்கரை 300 கிராம்
 4. பாதாம் 15
 5. முந்திரி 15
 6. கண்டன்ஸ்டு மில்க் 100ml
 7. ஏலக்காய்-2
 8. நெய் ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. ஒரு தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்
 2. முந்திரியை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
 3. முட்டை மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
 4. எடுத்துவைத்துள்ள முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடிக்கவும்
 5. அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கையால் நுரை வரும் வரை அடித்து வடிகட்டவும்
 6. இப்போது எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் கண்டன்ஸ்டு மில்க் முந்திரி அரைத்து ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்
 7. ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்
 8. ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி 10 முந்திரியைப் போட்டு சிவக்க வறுக்கவும்
 9. வறுத்த முந்திரி ஆறியவுடன் அடித்து வைத்துள்ள கலவையின் மேல் ஊற்றவும்
 10. ஒரு பெரிய குக்கரில் கால் பங்குக்கு கீழ் தண்ணீர் ஊற்றி தட்டு அல்லது கலவடையை போடவும்
 11. ஒரு சட்டியில் அடித்த கலவையை ஊற்றி குக்கரில் வைக்கவும்
 12. சட்டியின் மேல் மூடி போட்டு அதன் மேல் ஒரு வெயிட்டைத் தூக்கி வைக்கும்
 13. குக்கரை மூடி போட்டு 4 விசில் விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்
 14. 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஆறியதும் இறக்கி பாருங்கள்
 15. ஒரு கத்தியை வைத்து வெந்துவிட்டதா என்று செக் செய்யவும்
 16. கத்தியில் ஒட்ட வில்லை என்றால் வட்டிலாப்பம் தயாராகி விட்டது என்று அர்த்தம்
 17. சுவை மற்றும் அதிக சத்து நிறைந்த வட்டிலாப்பம் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sudha rani
Aug-29-2018
sudha rani   Aug-29-2018

Today i am tryed your recipe and results is very excellent

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்