வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு குழம்பு

Photo of Pasi payaru Kulambu by Reshma Babu at BetterButter
1059
1
0.0(0)
0

பாசிப்பயறு குழம்பு

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு குழம்பு செய்முறை பற்றி

சாதத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பயறு 100 கிராம்
  2. முருங்கைக்காய் 1
  3. கத்திரிக்காய் மூன்று
  4. சின்ன வெங்காயம் 10 பல்
  5. வெள்ளைப் பூண்டு 10 பல்
  6. பச்சைமிளகாய் 2
  7. தக்காளிப்பழம் 4
  8. மிளகாய் பொடி 4 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. மல்லித்தூள் நாள் டேபிள் ஸ்பூன்
  11. புளி கரைசல் அரை டம்ளர்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை தேவையான அளவு
  14. வெந்தயம் சோம்பு தாளிக்க

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகாய் பொடி மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  3. தக்காளி மற்றும் மல்லி பொடியை மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. அரைத்த தக்காளி விழுது புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பாசிப்பயறை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. பிறகு காய்கறிகளை போட்டு நன்கு வேக விடவும்
  7. காய்கறிகள் வெந்தவுடன் பாசிப்பயறு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும்
  8. காய்கறியும் பாசிப்பயறும் நன்கு வெந்தவுடன் அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும்
  9. இதனை சாதத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்
  10. ஆரோக்கியமான பாசிப்பயறு குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்