வீடு / சமையல் குறிப்பு / பாவ் பாஜி பராத்தா

Photo of Pav baji paratha by kala sriram at BetterButter
440
1
0.0(0)
0

பாவ் பாஜி பராத்தா

Aug-15-2018
kala sriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி பராத்தா செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான பராத்தா இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் -1, வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு -2, முட்டை கோஸ் - பொடியாக அரிந்தது- 1/2 கப்
  2. குடை மிளகாய் பொடியாக அரிந்தது -2, கோதுமை மாவு - 2 கப், உப்பு தேவைக்கேற்ப
  3. பாவ் பாஜி மசாலா - 2 ஸ்பூன், நெய் - பராத்தா செய்ய

வழிமுறைகள்

  1. பொடியாக அரிந்த காய்கள், கோதுமை மாவு, பாவ் பாஜி மசாலா, உப்பு இவைகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.
  2. எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலக்கவும். காய்கறிகளில் இருக்கும் தண்ணீரே போதும்.
  3. கொஞ்சம் தளர்வாக இருந்தால் இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இடவும்.
  4. காய்கறிகள் இருப்பதால் அதிகம் அழுத்தி செய்ய வேண்டாம். தவாவில் இரண்டு பக்கமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும். பாவ் பாஜி பராத்தா ரெடி
  5. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் போதும். விரும்பினால் வெள்ளரிக்காய் ரய்தா நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்