வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் காரட் ரைஸ்

Photo of Beetroot Carrot Rice by Sowmya Sundar at BetterButter
443
1
0.0(0)
0

பீட்ரூட் காரட் ரைஸ்

Aug-16-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் காரட் ரைஸ் செய்முறை பற்றி

பீட்ரூட், காரட் மற்றும் பிற காய்கறிகள் சேர்த்து செய்த சாதம் இது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி-1 கப்
  2. தண்ணீர்- 1 1/2 கப்
  3. பீட்ரூட் துருவல்-1/2 கப்
  4. காரட் துருவல்- 1/2 கப்
  5. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  6. சீரகம்-1 டீஸ்பூன்
  7. பட்டை,கிராம்பு,ஏலக்காய்-தலா 2
  8. வெங்காயம்-1
  9. குடைமிளகாய்-1
  10. பச்சை பட்டாணி-1/4 கப்
  11. உப்பு தேவையான அளவு
  12. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  13. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  14. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  15. கரம் மசாலா தூள்-1 டீஸ்பூன்
  16. எலுமிச்சை சாறு-1 டீ ஸ்பூன்
  17. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து உதிராக வேக வைத்து வடித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை தாளித்து வெங்காயம் , குடைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள், உப்புசேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் காரட் பீட்ரூட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.மிளகாய் தூள், மிளகு தூள் ,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  4. நன்றாக சுருள வதங்கியதும் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி தழை தூவி பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்