வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ஆனியன் மசால்

Photo of Chapati onion masal by Surya Rajan at BetterButter
318
3
0.0(0)
0

சப்பாத்தி ஆனியன் மசால்

Aug-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ஆனியன் மசால் செய்முறை பற்றி

இது ஒரு ஈஸியான ரெசிபி breakfast அல்லது லஞ்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொண்டு செல்லலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சப்பாத்தி செய்வதற்கு
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. உப்பு சிறிதளவு
  4. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  5. ஆனியன் மசாஜ் செய்வதற்கு
  6. பெரிய வெங்காயம்-3
  7. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  8. கடுகு அரை ஸ்பூன்
  9. சோம்பு அரை ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. உப்பு தேவையான அளவு
  12. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  13. கரம் மசாலா அரை ஸ்பூன்
  14. கறி மசாலா அரை ஸ்பூன்
  15. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  16. பட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. சப்பாத்தி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்
  2. இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்கவும்
  4. சப்பாத்திகளாக உருட்டி சூடான தவாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  5. ஆனியன் மசால் செய்வதற்கு
  6. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கடுகு சோம்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  7. பின் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  8. மிளகாய் தூள் கரம் மசாலா கறி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  9. பின் தண்ணீர் சிறிதளவு சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்
  10. பின் தேவையான உப்பு பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  11. தேவையான பதத்தில் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்