வீடு / சமையல் குறிப்பு / சவுத் இந்தியன் மீல்

Photo of South Indian meal by Surya Rajan at BetterButter
28
2
0.0(0)
0

சவுத் இந்தியன் மீல்

Aug-16-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சவுத் இந்தியன் மீல் செய்முறை பற்றி

பொதுவாக ஹோட்டல்களில் சவுத் இந்தியன் மீல் என்று கேட்டால் சாம்பார் ரசம் ஏதேனும் ஒரு பொரியல் பருப்பு பொடி நெய் இனிப்பு பாயசம் என்று தருவார்கள் கொஞ்சம் ஸ்பெஷலாக இதனை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி ஆக அலுவலகத்திற்கு செல்பவர்கள் கும் செய்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சாம்பார் செய்வதற்கு
 2. துவரம்பருப்பு ஒரு கப்
 3. தக்காளி பெரியது ஒன்று
 4. சின்ன வெங்காயம் 4
 5. பூண்டு-10 பல்
 6. முருங்கைக்காய் 1
 7. பீன்ஸ் 4
 8. கேரட் ஒன்று
 9. உருளைக்கிழங்கு ஒன்று
 10. மஞ்சள் தூள் சிறிதளவு
 11. சாம்பார் தூள் ஒரு ஸ்பூன்
 12. உப்பு தேவையான அளவு
 13. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
 14. கடுகு அரை ஸ்பூன்
 15. சீரகம் அரை ஸ்பூன்
 16. பெருங்காயத்தூள் சிறிதளவு
 17. ரசம் செய்வதற்கு
 18. புளி நெல்லி அளவு
 19. உப்பு தேவையான அளவு
 20. மஞ்சள் தூள் சிறிதளவு
 21. பூண்டு 5 பல்
 22. சீரகம் அரை ஸ்பூன்
 23. மிளகு அரை ஸ்பூன்
 24. கடுகு அரை ஸ்பூன்
 25. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
 26. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
 27. பெருங்காயத்தூள் சிறிதளவு
 28. தக்காளி ஒன்று
 29. உருளைக்கிழங்கு பொறியல் செய்வதற்கு
 30. உருளைக்கிழங்கு 3
 31. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
 32. உப்பு மிளகாய் தூள் அரை ஸ்பூன்
 33. கடுகு அரை ஸ்பூன்
 34. சோம்பு அரை ஸ்பூன்
 35. கருவேப்பிலை சிறிதளவு
 36. உப்பு தேவையான அளவு
 37. சேமியா பாயசம் செய்வதற்கு
 38. சேமியா ஒரு கப்
 39. பால் கால் லிட்டர்
 40. சர்க்கரை அல்லது வெல்லம் அரை கப்
 41. தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
 42. கிஸ்மிஸ் முந்திரி சிறிதளவு
 43. நெய் 2 ஸ்பூன்
 44. ஆம்லெட் செய்வதற்கு
 45. முட்டை ஒன்று
 46. சின்ன வெங்காயம் 4
 47. உப்பு தேவையான அளவு
 48. மிளகுத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

 1. சாம்பார் செய்வதற்கு
 2. பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு தேவையான தண்ணீர் சின்ன வெங்காயம் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
 4. பின் அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்
 5. வேக வைத்த பருப்புடன் மேற்கூறிய கலவையை சேர்த்து கலந்து மஞ்சள்தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
 6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
 7. ரசம் செய்வதற்கு
 8. புளி 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
 9. சீரகம் பூண்டு மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்
 10. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
 11. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
 12. தேவையான உப்பு மஞ்சள் தூள் இடித்து வைத்துள்ள சீரகம் பூண்டு மிளகு சேர்த்து வதக்கவும்
 13. பின் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
 14. உருளைக்கிழங்கு பொறியல் செய்வதற்கு
 15. உருளைக் கிழங்கினை பிரஷர் குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 16. பின்னர்தான் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்
 17. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கருவேப்பிலை சேர்க்கவும்
 18. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 19. பின் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறவும்
 20. சேமியா பாயாசம் செய்வதற்கு
 21. வெறும் வாணலியில் சேமியாவை 2 முதல் 3 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 22. ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுத்து கொள்ளவும்
 23. சேமியாவுடன் தேவையான பால் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்
 24. பின் தேவையான வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும்
 25. பின் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்
 26. ஆம்பளை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் முட்டை பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
 27. பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு மாவை போடவும்
 28. சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 29. 10 நிமிடம் கழித்து சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்தியாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
 30. இனி தயார் செய்த சாதம் சாம்பார் ரசம் உருளைக்கிழங்கு பொரியல் சேமியா பாயாசம் ஆகியவற்றுடன் தயிர் நெய் பருப்பு பொடி ஆகியவற்றையும் பரிமாறவும் அல்லது அவற்றைத் தனித்தனி பாக்ஸில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்