வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை சிக்கன் புலாவ்

Photo of Methi leaves chicken pulav by Sumaiya Arafath at BetterButter
519
2
0.0(0)
0

வெந்தயக்கீரை சிக்கன் புலாவ்

Aug-16-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை சிக்கன் புலாவ் செய்முறை பற்றி

வெந்தயக்கீரை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. கோழி இறைச்சி 1/4 கிலோ
  3. நறுக்கிய வெந்தயக் கீரை ஒரு கப்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி-2
  6. பச்சை மிளகாய் 2
  7. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  8. தயிர் அரை கப்
  9. நறுக்கிய மல்லி இலை அரை கப்
  10. நெய் 2 மேசைக்கரண்டி
  11. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  12. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  13. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  14. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  15. பெருஞ்சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
  16. சீரகத்தூள் கால் தேக்கரண்டி
  17. உப்பு தேவைக்கு
  18. பட்டை ஏலக்காய் தலா 2
  19. எந்த தேக்கரண்டி பாலில் சிறிது குங்குமப்பூவை ஊறவைக்கவும்

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற விடவும்
  2. கோழியை சுத்தம் செய்து மசாலா தடவி பொரித்தெடுக்கவும்
  3. வாணலில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  4. பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு இட்டு தாளிக்கவும்
  5. மசாலா பொருட்களையும் தயிரையும் சேர்க்கவும்
  6. வெந்தயக்கீரை மல்லி இலை போட்டு நன்றாக வதக்கவும்
  7. 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.
  8. ஊற வைத்த அரிசியை போட்டு வேக வைக்கவும்
  9. குங்குமப்பூ கலவையை மேலே ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்