வீடு / சமையல் குறிப்பு / பீட்சா ஃப்ரைடு ரைஸ்

Photo of Pizza Fried Rice by Sowmya Sundar at BetterButter
406
2
0.0(0)
0

பீட்சா ஃப்ரைடு ரைஸ்

Aug-17-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்சா ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

பீட்சா டாப்பிங்ஸ்ஸின் சுவையில் குழந்தைகளுக்கு பிடித்தமான ரைஸ் வெரைட்டி . காலை வேளையில் சட்டென செய்வதற்கு சுலபமான லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடித்த சாதம் - 1 கப்
  2. எண்ணெய்/வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய பூண்டு -1 டீஸ்பூன்
  5. நறுக்கிய தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து -1/8 கப்
  6. நறுக்கிய காரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து- 1/8 கப்
  7. மிளகாய் தூள்-1/4 டீஸ்பூன்
  8. மிளகு தூள்-1/4 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தக்காளி சாஸ்-1 டீ ஸ்பூன்
  11. ஓரிகானோ-1/2 டீஸ்பூன்
  12. சில்லி ஃப்ளேக்ஸ்-1/2 டீஸ்பூன்
  13. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  14. சீஸ் துருவல்-1/8 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் தக்காளி, பீன்ஸ், காரட், குடைமிளகாய் , உப்பு சேர்த்து வதக்கவும்
  2. காய் வதங்கியதும் மிளகாய் தூள், மிளகு தூள்,தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் ஓரிகானோ,சர்க்கரை மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் கலந்து அதனுடன் வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்
  3. டலஞ்ச் பாக்ஸில் சாதத்தை வைத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்