வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் தயிர் சாண்ட்விச்

Photo of Vegetable Curd Sandwich by Sowmya Sundar at BetterButter
258
0
0.0(0)
0

வெஜிடபிள் தயிர் சாண்ட்விச்

Aug-19-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் தயிர் சாண்ட்விச் செய்முறை பற்றி

காலை நேர அவசரத்தில் உடனடியாக செய்து கொடுக்கலாம் இந்த ஆரோக்கியமான சாண்ட்விச்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள்- 8
  2. வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  3. எள்- 1 டேபிள் ஸ்பூன்
  4. கெட்டி தயிர்- 1/2 கப்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  6. பொடியாக நறுக்கிய காரட்-1
  7. பச்சை மிளகாய் விழுது-1/2 டீஸ்பூன்
  8. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சாட் மசாலா -1 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பிரெட், வெண்ணெய்,எள் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  2. ஒரு பிரெட்டில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கலவையை பரப்பவும்.
  3. அதனை மற்றொரு பிரட்டால் மூடவும்.தவாவில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு அதன் மேல் சிறிது எள் தூவவும்.அதன் மேல் தயார் செய்த பிரட் சாண்ட்விச்சை வைத்து நன்றாக டோஸ்ட் செய்து மற்றொரு பக்கமும் இதே போல டோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. இரண்டாக கட் செய்து டிபன் பாக்ஸில் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்