வீடு / சமையல் குறிப்பு / உளுந்து உப்புமா

Photo of Ulunthu uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
931
1
0.0(0)
0

உளுந்து உப்புமா

Aug-19-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உளுந்து உப்புமா செய்முறை பற்றி

டிபன் பாக்ஸிற்கு ஏற்ற சுவையான ரெசிபி இது. செய்வதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் ஆரோக்கியமான உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஊற வைத்து அரைக்க தேவையானவை
  2. உருட்டு உளுந்து கால் கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  5. பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் தலா 1 அல்லது 2
  6. உப்புமாவிற்கு தேவையான மற்ற பொருள்கள்
  7. கேரட் துருவல் ,வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சை பட்டாணி தலா 2 மேஜைக்கரண்டி
  8. தேங்காய் துருவல் 1/8 கப்
  9. உப்பு நான்கு சிட்டிகை
  10. தாளிக்க தேவையானவை
  11. எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பெருங்காயம் நான்கு சிட்டிகை

வழிமுறைகள்

  1. உருட்டு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு பெருங்காயம் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த விழுதை ஒரு தட்டில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஆற வைத்து நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மற்ற காய்களைச் சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்
  6. உதிர்த்து வைத்ததை சேர்த்து கிளறவும்
  7. தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்
  8. நல்ல உதிர்உதிராக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறவைத்து டிபன் பாக்ஸில் பேக் செய்து கொள்ளவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்