வீடு / சமையல் குறிப்பு / மசாலா சீஸ் டோஸ்ட்

Photo of Masala cheese toast by Krishnasamy Vidya Valli at BetterButter
442
0
0.0(0)
0

மசாலா சீஸ் டோஸ்ட்

Aug-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா சீஸ் டோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் டிபன் பாக்ஸ் ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் ஸ்லைஸ் 2
  2. சீஸ் துருவல் 1/4 கப்
  3. வெண்ணெய்/நெய்-2 தேக்கரண்டி
  4. மசாலாவிற்கு தேவையானவை
  5. வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. கேரட்துருவல் -2 மேஜைக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. உப்பு 1/4 தேக்கரண்டி
  10. காஷ்மீர் சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
  11. கரம்மசாலா, ஆம்சூர் பவுடர், தனியா பொடி, சீரகப்பொடி தலா 1/8 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. எண்ணெய் 1 தேக்கரண்டி
  14. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  15. சீரகம் 1/4 தேக்கரண்டி
  16. பச்ச மிளகாய் 1 பொடியாக நறுக்கவும்

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்
  3. பிரட் ஸ்லைஸின் இரண்டு புறமும் வெண்ணெய்/நெய் தடவி தோசை கல்லில் ஒரு முறை போட்டு எடுக்கவும்
  4. ஒரு புறம் மசாலா தடவி அதன்மேல் சீஸ்துருவல் சேர்த்து டோஸ்ட் செய்யவும்
  5. கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்