வீடு / சமையல் குறிப்பு / புதினா பீஸ் புலாவ்

Photo of Pudina Peas Pulao by Sowmya Sundar at BetterButter
479
0
0.0(0)
0

புதினா பீஸ் புலாவ்

Aug-21-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா பீஸ் புலாவ் செய்முறை பற்றி

புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து செய்த புலாவ் .லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற உணவு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. தண்ணீர்- 1 1/2 கப்
  3. பச்சை பட்டாணி-1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-6
  7. சீரகம் ஒரு டீஸ்பூன்
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  9. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் 10 நறுக்கியது
  11. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  12. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  13. அரைக்க:
  14. புதினா 3/4 கப்
  15. கொத்தமல்லி 1/4 கப்
  16. பச்சை மிளகாய் 2
  17. இஞ்சி ஒரு துண்டு
  18. பூண்டு 3 பல்

வழிமுறைகள்

  1. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முந்திரி பருப்பு, பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை பட்டாணி் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  4. நன்றாக வதங்கியதும் பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான தண்ணீர்,சர்க்கரை சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்
  5. குக்கரை திறந்து எலுமிச்சை சாறு கலந்தால் புதினா பீஸ் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்