வீடு / சமையல் குறிப்பு / எக் பரோட்டா

Photo of Egg parotta by Revathi Reva at BetterButter
749
1
0.0(0)
0

எக் பரோட்டா

Aug-22-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் பரோட்டா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு டிபன்பாக்ஸ் கொடுக்க ஏற்றது. ஒரு பரோட்டாவே நிறைவான உணவாக இருக்கும் குழந்தைகளுக்கு.குறுகிய நேரத்தில் செய்யகூடிய சுவையான பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரோட்டாவிற்கு
  2. கோதுமைமாவு 1கப்
  3. மைதா 1கப் ( விரும்பினால்)
  4. உப்பு
  5. தண்ணீர்
  6. எண்ணெய்
  7. முட்டை 1
  8. ஆம்லெட்டிற்கு
  9. முட்டை 4
  10. வெங்காயம் 2
  11. தக்காளி 1
  12. பச்சைமிளகாய் 2
  13. உப்பு
  14. கொத்தமல்லி
  15. மிளகுதூள் 1ஸ்பூன்
  16. சில்லிஃப்ளேக்ஸ் 1ஸ்பூன்
  17. சாட் மசாலா( விரும்பினால்)

வழிமுறைகள்

  1. மாவில் உப்பு, முட்டை,எண்ணெய் சேர்த்து பிசறி தேவையான் தண்ணீர் ஊற்றி பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும்
  2. முட்டையில் அனைத்து பொருட்களும் சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. மாவை உருண்டையாக உருட்டி பெரிய சப்பாத்தியாக பிரட்டவும். திரட்டிய சப்பாத்தியில் எண்ணெய், நெய் கலந்து தெளிக்கவும். சிறிது மைதா மாவை தூவி கத்தியால் நீளமாக கட் செய்யவும்
  4. ஒரு ஒரு லேயராக மேலாக வைத்து உருட்டவும்
  5. தட்டையாக தட்டி மீண்டும் சப்பாத்தியாக திரட்டவும்
  6. சூடேறிய தோசைகல்லில் சுடவும். எண்ணெய் விடவும்
  7. இரண்டு புறமும் சிவந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கலக்கிய முட்டையை ஊற்றவும்
  8. மெதுவாக திருப்பி போட்டு எண்ணெய் விட்டு நன்கு வேக விடவும். துணியால் மிதமாக அழுத்தி அழுத்தி விடவும்
  9. எக் பரோட்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்