வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தோசை

Photo of Vendaya dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
327
0
0.0(0)
0

வெந்தய தோசை

Aug-23-2018
Krishnasamy Vidya Valli
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தோசை செய்முறை பற்றி

தோசை பிரியர்களுக்கான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி இது .சாதாரணமாக முறுமுறு என்று தோசை வார்த்து எடுத்துக்கொண்டால் மதியம் சாப்பிடும்போது காய்ந்துபோகும். ஆனால் இந்த தோசைக்காயாமல் ப்ரஷ்ஷாக சாப்ட்டாக லேசாக அப்படியே இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி ஒரு கப்
  2. உருட்டு உளுந்து 1/8 கப்
  3. வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
  4. உப்பு ஒரு தேக்கரண்டி
  5. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  6. சீரகம் ஒரு தேக்கரண்டி
  7. கருவேப்பிலை நான்கு ஆர்க்கு
  8. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயம் களைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்
  2. உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின்னர் சீரகம் கருவேப்பிலை கலந்து கொள்ளவும்
  3. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய்ந்தவுடன் தோசை வார்த்து எடுக்கவும்
  4. கொத்தமல்லி சட்னி அல்லது மிளகாய் பொடியுடன் லஞ்ச் பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்