வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு கத்திரிக்காய் சாதம்

Photo of Stuffed Brinjal Rice by Deepa Srivatsan at BetterButter
418
1
0.0(0)
0

ஸ்டஃப்டு கத்திரிக்காய் சாதம்

Aug-23-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு கத்திரிக்காய் சாதம் செய்முறை பற்றி

கத்திரிக்காயில் ஸ்டப் செய்திருப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. விதையில்லாத வயலட் கத்திரிக்காய் கால் கிலோ (சிறியது)
  2. அரிசி 2 கப் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி-2
  5. சாம்பார் வெங்காயம் ஐந்து
  6. பூண்டு 4 பல்
  7. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  8. மிளகாய்வற்றல் 3
  9. பட்டை ஒரு சிறிய துண்டு
  10. சோம்பு கால் டீஸ்பூன்
  11. ஏலக்காய்-2
  12. கிராம்பு-2
  13. மராட்டி மொக்கு -2
  14. கசகசா கால் டீஸ்பூன்
  15. வற்றல் பொடி அரை டீஸ்பூன்
  16. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  17. உப்பு கால் டீஸ்பூன்.
  18. எண்ணை தேவையான அளவு
  19. பெருங்காயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை காம்பு நீக்கி கீழே உள்ள படத்தைப் போல் நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் பொடி காரப் பொடி பெருங்காயப் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து கத்தரிக்காயில் அடைத்து வைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. வெறும் வாணலியில் பட்டை கிராம்பு மராட்டி மொக்கு சோம்பு கசகசா ஆகியவற்றை வறுத்து மிக்சியில் பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  5. மிக்ஸியில் இஞ்சி பூண்டு சிறிய வெங்காயம் உடன் இரண்டு மிளகாய் வற்றலை நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பிரிஞ்சி இலையை போட்டு வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்
  7. மூன்று நிமிடம் கழித்து அடைத்து வைத்துள்ள கத்திரிக்காயை அதன் மீது போட்டு நன்றாக பிரட்டவும்
  8. இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. நன்றாக வதங்கியதும் தனியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்
  10. பின் உதிரியாக வடித்த சாதத்தை அதன் மீது போட்டு நன்றாக கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்