Photo of Bagala bath by Deepa Srivatsan at BetterButter
559
1
0.0(0)
0

பகாலாபாத்

Aug-23-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பகாலாபாத் செய்முறை பற்றி

அரிசியில் பால் சேர்த்து வேக வைப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 2 கப்
  2. பால் 2 கப்
  3. மாதுளை முத்துக்கள் அரை கப்
  4. பச்சை மிளகாய் 3
  5. மிளகாய்வற்றல் 1
  6. கடுகு ஒரு டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  8. கருவேப்பிலை 3 முதல் 4 ஆர்க்குகள்
  9. உலர்திராட்சை அரை கைப்பிடி
  10. இஞ்சி துருவியது அரை டீஸ்பூன்
  11. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  12. புளிப்பில்லாத தயிர் 2 ஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை தண்ணீரில் களைந்து ஒரு டம்ளர் பால் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. பிறகு மீதமுள்ள பால் மற்றும் அரை தம்ளர் வெந்நீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் உலர்திராட்சை மிளகாய் வற்றல் பெருங்காயம் கறிவேப்பிலை இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்
  4. வறுத்ததை சாதத்தின் மீது போட்டு 2 ஸ்பூன் தயிர் சேர்த்து மாதுளை முத்துக்கள் கொத்தமல்லி தூவி கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்