BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / A Week's Healthy Lunch Boxes(Monday to Friday)

Photo of A Week's Healthy Lunch Boxes(Monday to Friday) by Sowmya Sundar at BetterButter
469
2
5(2)
0

A Week's Healthy Lunch Boxes(Monday to Friday)

Aug-23-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • మిళితం
  • ఆవిరికి
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பு கொண்டைக்கடலை புலாவ் செய்ய:
  2. கருப்பு கொண்டைக்கடலை -1/2 கப்
  3. பாஸ்மதி அரிசி - 1 கப்
  4. தண்ணீர் 1 1/2 கப்
  5. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி ஒன்று
  7. கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து -1/4 கப்
  8. பூண்டு 4 பல்
  9. இஞ்சி 1 துண்டு
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  12. சீரகம்-1 டீஸ்பூன்
  13. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  16. வறுத்து பொடி செய்ய:
  17. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  18. மிளகாய்வற்றல் 2
  19. கொத்தமல்லி விதை ஒரு டேபிள்ஸ்பூன்
  20. சீரகம் ஒரு டீஸ்பூன்
  21. ஸ்வீட் கார்ன் மினி இட்லி ஃப்ரை செய்ய
  22. ஸ்வீட் கார்ன் 1 கப்
  23. இட்லி அரிசி 1 கப்
  24. உளுந்து 2 டீஸ்பூன்
  25. தேங்காய் துருவல் - 1/8 கப்
  26. உப்பு தேவையான அளவு
  27. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  28. கடுகு ஒரு டீஸ்பூன்
  29. உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  30. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  31. வேர்க்கடலை ஒரு டீஸ்பூன்
  32. கறிவேப்பிலை சிறிது
  33. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  34. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  35. சின்ன வெங்காயம் - 10
  36. தோசை மிளகாய் பொடி-2 டீஸ்பூன்
  37. கருப்பு உளுந்து சாதம் செய்ய
  38. கருப்பு உளுந்து- 1/2 கப்
  39. அரிசி -1 கப்(பச்சரிசி அல்லது புழுங்கலரிசி)
  40. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  41. பூண்டு-4 பல்
  42. தேங்காய் துருவல்-1/4 கப்
  43. உப்பு தேவையான அளவு
  44. நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  45. பாசிப்பருப்பு பாலக் பராத்தா செய்ய
  46. வேக வைத்த பாசிப்பருப்பு-1/4 கப்
  47. பாலக் கீரை - 1/2 கப்
  48. கோதுமை மாவு- 1 கப்
  49. உப்பு தேவையான அளவு
  50. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  51. சீரகம் -1 டீஸ்பூன்
  52. எண்ணெய்-2 டீஸ்பூன்+ பராத்தா வாட்ட
  53. பச்சை மிளகாய்-1
  54. அவல் புளியோதரை செய்ய
  55. அவல் ஒரு கப்
  56. புளி -நெல்லிக்காய் அளவு
  57. உப்பு தேவையான அளவு
  58. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  59. தாளிக்க
  60. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  61. கடுகு ஒரு டீஸ்பூன்
  62. உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  63. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  64. வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்
  65. மிளகாய்வற்றல்- 4
  66. கறிவேப்பிலை சிறிது
  67. பெருங்காயம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருப்பு கொண்டைக்கடலை புலாவ் செய்ய முதலில் வெறும் வாணலியில் வறுக்க தேவையான பொருட்களை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  2. கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 2 விசில் வரை வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் ,தக்காளி , பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் வெந்த கொண்டைக்கடலை, கேரட், குடைமிளகாய், அரைத்த மசாலா பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்
  5. இதனுடன் களைந்து பத்து நிமிடம் ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும். கருப்பு கொண்டைக்கடலை புலாவ் தயார்.
  6. ஸ்வீட் கார்ன் இட்லி செய்வதற்கு முதலில் இட்லி அரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் மிக்சியில் தேங்காய் துருவல், உப்பு மற்றும் ஸ்வீட் கார்னுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.மாவை பொங்க வைக்க தேவையில்லை
  7. மினி இட்லி தட்டில் மாவை விட்டு பத்து நிமிடம் வரை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்
  9. பின் மஞ்சள் தூள், பெருங்காயம், தோசை மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். அதனுடன் மினி இட்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். ஸ்வீட் கார்ன் மினி இட்லி ஃப்ரை தயார்.
  10. கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்
  11. பின்னர் அதை அரிசியுடன் சேர்த்து களைந்து விட்டு குக்கரில் சேர்த்து தண்ணீர் விட்டு உப்பு, நல்லெண்ணெய், தேங்காய் துருவல், நறுக்கிய பூண்டு சேர்த்து மிதமான தீயில் இரண்டு விசில் வரை வேக வைத்து கொள்ளவும். காரமில்லாத ஆரோக்கியமான கருப்பு உளுந்து சாதம் தயார்.
  12. பாசிப்பருப்பு பாலக் பராத்தா செய்ய முதலில் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அலசிய பாலக் கீரை பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும்
  13. பின் அதை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். கோதுமை மாவு,உப்பு,மஞ்சள் தூள், பாசிப்பருப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  14. மாவை உருண்டைகளாக உருட்டி சிறிது கனமான பராத்தாகளாக தேய்த்து கொள்ளவும்
  15. தவாவில் ஒவ்வொரு பராத்தாவாக போட்டு எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  16. கட் செய்து பேக் செய்யவும். பாசிப்பருப்பு பாலக் பராத்தா தயார்
  17. அவல் புளியோதரை செய்ய முதலில் அவலை களைந்து விட்டு புளிகரைசலை அவல் மூழ்கும் அளவுக்கு விட்டு உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  18. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, வேர்க்கடலை, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
  19. பின் அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் வெந்தய பொடி சேர்த்து ஊறிய அவலை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்
  20. ஐந்து நாட்களுக்கான ஹெல்த்தி லஞ்ச் பேக் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fairose banu
Aug-24-2018
fairose banu   Aug-24-2018

Very nice recipes...

Deepa Srivatsan
Aug-23-2018
Deepa Srivatsan   Aug-23-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்