உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புதினா சிக்கன் புலாவ்

Photo of Mint Chicken Pulao by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
0
2
0(0)
0

புதினா சிக்கன் புலாவ்

Aug-23-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சிக்கன் புலாவ் செய்முறை பற்றி

புதினா சிக்கன் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. சிக்கன் - 1/4 கிலோ
  3. புதினா - 1 கட்டு
  4. வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
  5. பச்சைமிளகாய் - 3
  6. பச்சை பட்டாணி - 1/4 கப்
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. சீரகத்தூள - 1 தேக்கரண்டி
  10. கரம்மசாலா - 1/2 தேக்கரண்டி
  11. தயிர் - 3 தேக்கரண்டி
  12. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  13. நெய் - 2 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
  15. பட்டை - 1
  16. ஏலக்காய் - 4
  17. கிராம்பு - 5
  18. பிரியாணி இலை - 1
  19. முந்திரி -5
  20. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. 1கட்டு புதினாவை நன்கு கழுவி அதனுடன் 3 பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய் ,கிராம்பு,பட்டை,பிரியாணி இலை , முந்திரி சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. இப்பொழுது அரைத்து வைத்த புதினா பச்சை மிளகாய் விழுது, தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  8. மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகத்தூள் சேர்த்து்நன்கு வதக்கவும்.
  9. இப்பொழுது இதனுடன் கழுவி வைத்துள்ள சிக்கன் , பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. சிக்கன் மற்றும் பட்டாணி புதினா கலவையுடன் நன்கு கலந்து வந்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து இலேசாக மசாலாவுடன் கலந்து விடவும்.
  11. இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ( 1கப் -11/2 கப் தண்ணீர் ,2 கப் அரிசி -3 கப் தண்ணீர் ) தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வேகவிடவும்.
  12. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பில் இருந்து்இறக்கி விசில் அடங்கியதும் மூடியை திறந்து இலேசாக கிளறி விடவும்.
  13. சுவையான புதினா சிக்கன் புலாவ் லஞ்ச் பாக்ஸ்க்கு தயார்.இதனுடன் சிக்கன் 65 மற்றும் வெள்ளரிக்காய் ரைத்தாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்