வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் ராகி இடியாப்பம்

Photo of Sweet ragi ediyaappam by poorani Kasiraj at BetterButter
153
1
0.0(0)
0

ஸ்வீட் ராகி இடியாப்பம்

Aug-24-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் ராகி இடியாப்பம் செய்முறை பற்றி

ஸ்வீட் ராகி இடியாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்ப மாவு 3/4 கப்
  2. ராகி மாவு கால் கப்
  3. தேங்காய்த்துருவல் 6 ஸ்பூன்
  4. சீனி அல்லது வெல்லம்
  5. ஒரு ஸ்பூன் நெய்

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவையும் ராகி மாவையும் நன்கு கலந்து கொள்ளவும்
  2. பின்னர்உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை அதனுடன் சேர்க்கவும்
  3. தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் வைத்து இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் மிகவும் சூடாக இருக்க வேண்டும்
  6. இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும்
  7. 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக விடவும்
  8. நன்கு வெந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  9. ஆறியதும் சிறிது தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் போட்டு எடுக்கவும்
  10. தண்ணீரை நன்கு வடித்து கொள்ளவும்
  11. ராகி இடியாப்பத்துடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்
  12. சிறிது சீனியும் நெய்யும் சேர்த்து கிளறி பரிமாறவும்
  13. ஸ்வீட் இடியாப்பம் ரெடி
  14. தேங்காய் எண்ணெயில் அ நெய் சேர்த்து தேங்காய் துருவலை நன்கு வதக்கிய பின்னர் சேர்த்தாலும் கெடாமல் இருக்கும் ருசி நன்றாக இருக்கும்
  15. சாப்பிட்டாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்