வீடு / சமையல் குறிப்பு / மதிய டிபன் பாக்ஸ் உணவுகள் 5 நாட்களுக்கு

Photo of Lunch box dishes for 5 days by Jayasakthi Ekambaram at BetterButter
433
0
0.0(0)
0

மதிய டிபன் பாக்ஸ் உணவுகள் 5 நாட்களுக்கு

Aug-24-2018
Jayasakthi Ekambaram
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதிய டிபன் பாக்ஸ் உணவுகள் 5 நாட்களுக்கு செய்முறை பற்றி

டிபன் பாக்ஸில் போட்டு தரும் வெரைட்டி ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி சாதத்திற்கு தேவையான பொருட்கள்
  2. புளி எலுமிச்சம்பழம் அளவு
  3. உப்பு ஒன்றரை ஸ்பூன்
  4. வறுத்துப் பொடி செய்வதற்கு
  5. தனியா ஒரு டீஸ்பூன்
  6. வெந்தயம் அரை ஸ்பூன்
  7. மிளகு கால் ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் இரண்டு
  10. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  11. நல்லெண்ணெய் 5 ஸ்பூன்
  12. கருவேப்பிலை ஒரு கொத்து
  13. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  14. கொண்டைக்கடலை சுண்டலுக்கு
  15. கொண்டை கடலை 150 கிராம்
  16. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  17. காய்ந்த மிளகாய் ஒன்று
  18. கருவேப்பிலை ஒரு கொத்து
  19. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  20. தக்காளி சாதம் செய்வதற்கு
  21. தக்காளி ஆறு
  22. வெங்காயம் ஒன்று
  23. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  24. மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்
  25. பட்டை ஒன்று
  26. கிராம்பு-2
  27. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  28. புதினா இலைகள் 10
  29. பூண்டு 15 பற்கள்
  30. உருளைக்கிழங்கு வருவல்:
  31. உருளைக்கிழங்கு கால் கிலோ
  32. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  33. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  34. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  35. ஓரிகேனோ அரைஸ்பூன்
  36. எண்ணெய் 4 ஸ்பூன்
  37. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  38. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  39. வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கு
  40. கேரட் 2
  41. பச்சை பட்டாணி 100 கிராம்
  42. வெங்காயம் ஒன்று
  43. பெரிய தக்காளி ஒன்று
  44. எண்ணெய் 4 ஸ்பூன்
  45. நெய் ஒரு ஸ்பூன்
  46. பட்டை ஒரு சிறிய துண்டு
  47. கிராம்பு-2
  48. அன்னாசி பூ 1
  49. ஏலக்காய் ஒன்று
  50. பிரிஞ்சி இலை ஒன்று
  51. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  52. உப்புத் தூள் ஒன்றரை ஸ்பூன்
  53. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  54. தனியா தூள் ஒன்றரை ஸ்பூன்
  55. கரம் மசாலா தூள் ஒன்றரை ஸ்பூன்
  56. பாசுமதி அரிசி ஒன்றரை கப்
  57. கொத்துமல்லி தழை ஒரு பிடி அளவு
  58. புதினா இலை அரை பிடி
  59. கொண்டைக்கடலை வடை
  60. கொண்டைக்கடலை 150 கிராம்
  61. பச்சை மிளகாய் 2
  62. வெங்காயம் ஒன்று
  63. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  64. பூண்டு விழுது அரை ஸ்பூன்
  65. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  66. கறிவேப்பிலை ஒரு கொத்து
  67. கொத்து மல்லி தழை அரை கைப்பிடி அளவு
  68. மசாலா இட்லி:
  69. இட்லி மாவு கால் கிலோ
  70. வெங்காயம் ஒன்று
  71. தக்காளி ஒன்று
  72. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  73. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  74. உப்புத் தூள் அரை ஸ்பூன்
  75. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
  76. கடுகு ஒரு ஸ்பூன்
  77. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  78. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  79. உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
  80. சப்பாத்தி பன்னீர் ரோல்ஸ் செய்வதற்கு
  81. சப்பாத்தி 4
  82. பனீர் 100 கிராம்
  83. பச்சை குடைமிளகாய் ஒன்று
  84. வெங்காயம் ஒன்று
  85. தக்காளி ஒன்று
  86. கேரட் ஒன்று
  87. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  88. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  89. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  90. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  91. வெண்ணெய் ஒரு ஸ்பூன்
  92. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. திங்கள் கிழமை: புளியை உப்பு போட்டு ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  4. எண்ணை காய்ந்ததும் கடுகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்
  6. இறக்குவதற்கு முன் பொடியைத் தூவி இறக்கவும்
  7. ஆறவைத்த சாதத்தில் இந்த புளிக் கரைசலை கொட்டி கிளறவும்
  8. சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை இரவே ஊறவைக்க வேண்டும்
  9. காலையில் நீரை வடிகட்டி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும்
  10. வெந்த பிறகு நீரை வடிகட்டி விட வேண்டும்
  11. இந்த நீரை ரசம் வைக்க உபயோகப்படுத்தலாம்
  12. கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்
  13. இதனை வெந்த கொண்டைக்கடலையுடன் சேர்க்கவும்
  14. கொத்துமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்
  15. டிபன் பாக்ஸில் புளி சாதமும் சுண்டலும் வைத்து தரவும்
  16. ஒரு சிறிய டப்பாவில் ஆப்பிள் பழத் துண்டுகள் கொடுத்தனுப்பலாம்
  17. செவ்வாய்க்கிழமை : தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும்
  18. தக்காளி சாதம் செய்வதற்கு:
  19. வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
  20. தக்காளியை மிக்ஸியில் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்
  21. பூண்டு பற்களை உரித்துக் கொள்ளவும்
  22. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  23. எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு தாளிக்கவும்
  24. வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  25. பூண்டு பற்களைப் போட்டு வதக்கவும்
  26. இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் மிளகாய் தூள் உப்பு தூள் போட்டு வதக்கவும்
  27. புதினா இலைகளை போடவும்
  28. தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்
  29. ஆறிய சாதத்தில் இந்த தக்காளியை போட்டு கிளறவும்
  30. உருளைக்கிழங்கு வருவல் செய்வதற்கு : உருளைக்கிழங்கை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  31. தோலை உரித்து கையால் உதிர்த்து கொள்ளவும்
  32. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  33. பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  34. இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தூள் மஞ்சள் தூள் ஓரிகேனோ போட்டு வதக்கவும்
  35. நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்து வைக்கவும்.
  36. தக்காளி சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவலை சைட் டிஷ் ஆக கொடுத்தனுப்பலாம்
  37. புதன்கிழமை:
  38. வெஜிடபிள் பிரியாணியும் கொண்டைக்கடலை வடையும்
  39. பாசுமதி அரிசியை ஒருதரம் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  40. ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
  41. அந்த நேரத்தில் வெங்காயம் தக்காளி கேரட் மூன்றையும் அறிந்து கொள்ள வேண்டும்
  42. பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  43. அடுப்பில் வாணலியை வைத்து ஆயிலும் நெய்யும் ஊற்ற வேண்டும்
  44. பட்டை கிராம்பு அன்னாசி பூ பிரிஞ்சி இலை தாளிக்கவும்
  45. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  46. அடுத்தது தக்காளியை போட்டு வதக்கவும்
  47. கேரட் பட்டாணி போட்டு வதக்கவும்
  48. இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
  49. மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்
  50. கொத்தமல்லி இலைகளையும் புதினா இலைகளையும் போட்டு வதக்கவும்
  51. அரிசி ஊறவைத்த தண்ணீரை ஊற்றவும்
  52. தண்ணீர் கொதித்ததும் அரிசியையும் உப்பையும் போடவும்
  53. அது கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு காரம் சரி பார்த்து குக்கரை மூடவும்
  54. மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  55. ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து லேசாக கிளறவும்
  56. கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்
  57. கொண்டைக்கடலை வடை செய்வதற்கு அதை முன்னாள் இரவே ஊற வைக்கவும்
  58. காலையில் நீரை வடித்து பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  59. அதில் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  60. கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  61. எண்ணை காய்ந்ததும் வடைகளை சுட்டு எடுக்கவும்
  62. இதை வெஜிடபிள் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக கொடுத்தனுப்பலாம்
  63. உப்பு கலந்த தயிரில் பொடியாக வெங்காயம் சேர்த்து கொடுத்தனுப்பலாம்
  64. வியாழக்கிழமை:
  65. மசாலா இட்லி
  66. இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வைக்கவும்
  67. கால் மணி நேரம் வேக வைத்து அதை தட்டில் எடுத்து வைக்கவும்
  68. அடுப்பில் வாணலியை வைத்து நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்
  69. என்னை தாக்க காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  70. அது பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  71. தக்காளியை போட்டு வதக்கவும்
  72. மிளகாய்த் தூள் உப்பு தூள் சோம்பு தூள் போட்டு வதக்கவும்
  73. அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
  74. தண்ணீரைக் கொதிக்க விடவும்
  75. தண்ணீர் வற்றும் போது மினி இட்லிகளை சேர்த்து கிளறவும்
  76. கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
  77. இதை டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பவும்
  78. வெள்ளிக்கிழமை:
  79. சப்பாத்தி பனீர் வெஜ் ரோல்
  80. வெங்காயம் தக்காளி குடை மிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும்
  81. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  82. பனீரை துருவிக்கொள்ளவும்
  83. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  84. வெண்ணையும் ஊற்றவும்
  85. அது காய்ந்ததும் வெங்காயம் கேரட் போட்டு வதக்கவும்
  86. குடை மிளகாய் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
  87. மசாலா பொடிகளை சேர்க்கவும்
  88. பன்னீர் துருவலை சேர்க்கவும்
  89. உப்பு தூள் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
  90. காய்கள் வேகும் வரை சிறிய தீயில் வைக்கவும்
  91. மூடி வைத்து வேக விடவும்
  92. தண்ணீர் சுண்டிய பிறகு இறக்கவும்
  93. கொத்தமல்லி தழை தூவவும்
  94. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்
  95. இந்த கலவையை சப்பாத்தியில் வைத்து ரோல் மாதிரி சுற்றவும்
  96. தக்காளி சாஸை சைட்டிஷ் ஆக கொடுத்தனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்