Photo of Healthy Green Rice by Meena Vels at BetterButter
564
4
0.0(0)
0

Healthy Green Rice

Aug-24-2018
Meena Vels
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Healthy Green Rice செய்முறை பற்றி

ஒரு குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு ,சோம்பு- ஒரு ஸ்பூன் தாளித்து, அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் -ஒன்று சேர்த்து நன்கு வதக்கவும் .பின் ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கவும். இதற்கிடையில் புதினா இலைகளை சுத்தம் செய்து ,சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும். பட்டாணி நன்கு வதங்கியதும் ,அரைத்த புதினா பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் .பின் அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு மற்றும் (கழுவிய) அரிசி 2 கப் சேர்த்து ஒரு கிளறு கிளறி ,குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும் .20 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்யவும் .பிரஷர் அதுவாக அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும் .மெதுவாக ஒரு கிளறு கிளறி சூடாக பரிமாறவும்.Healthy Green Rice தயார்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடுகு ஒரு ஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  3. சோம்பு ஒரு ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் ஒன்று
  5. ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி ஒரு கப்
  6. புதினா இலைகள் ஒரு கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு ,சோம்பு- ஒரு ஸ்பூன் தாளித்து, அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் -ஒன்று சேர்த்து நன்கு வதக்கவும் .
  2. பின் ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இதற்கிடையில் புதினா இலைகளை சுத்தம் செய்து ,சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும்.
  4. பட்டாணி நன்கு வதங்கியதும் ,அரைத்த புதினா பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. .பின் அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு மற்றும் (கழுவிய) அரிசி 2 கப் சேர்த்து ஒரு கிளறு கிளறி ,குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும் .
  6. 20 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்யவும் .பிரஷர் அதுவாக அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும் .மெதுவாக ஒரு கிளறு கிளறி சூடாக பரிமாறவும்.Healthy Green Rice தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்