வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி மேக்ரோனி...

Photo of SPICY MACARONI... by fairose banu at BetterButter
211
2
0.0(0)
0

ஸ்பைஸி மேக்ரோனி...

Aug-25-2018
fairose banu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி மேக்ரோனி... செய்முறை பற்றி

காரசாரமான டிபன் பாக்ஸ் ரெசிப்பி...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய்
  2. தண்ணீர் 5 தம்பளர்
  3. வெண்ணை 2டீஸ்பூன்
  4. மேக்ரோனி 200gms
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று
  7. தக்காளி ஒன்று
  8. டொமேட்டோ சாஸ் ஒரு டீஸ்பூன்
  9. சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
  10. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் அரை மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்க வேண்டும்
  2. பின்பு அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும்..
  3. தண்ணீர் சூடான பிறகு அதில் மக்ரோனியை போட்டு வேக வைக்க வேண்டும்
  4. மேக்ரோனி வெந்த பிறகு அதை தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  5. பின்பு மற்றொரு கடாயில் வெண்ணை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  6. நன்கு வதங்கிய உடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  8. நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்...
  9. பின்பு அதில் தக்காளி சில்லி சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்..
  10. பின்பு அதில் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து நன்கு கிளறவும்
  11. இப்பொழுது சுவையான மற்றும் காரசாரமான மேக்ரோனி தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்