வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சாதம்

Photo of Dhal rice by hajirasheed haroon at BetterButter
637
3
0.0(0)
0

பருப்பு சாதம்

Aug-25-2018
hajirasheed haroon
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சாதம் செய்முறை பற்றி

துவரம் பருப்பு பாசிப்பருப்பு பாஸ்மதி அரிசி நீட்டிப்பு செய்துள்ளது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள் சைடிஷ்ஷாக உருளைக்கிழங்கு சோயா வருவல் சேர்த்து கொடுத்து அனுப்பலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. பாசிப்பருப்பு கால் கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 1
  9. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  10. நெய் தேவையான அளவு
  11. உப்பு தேவையான அளவு
  12. மல்லி புதினா இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் பாசிப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. குக்கரில் நெய் ஊற்றி பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது புதினா மல்லி இலை உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் வேக வைத்துள்ள பருப்பு வேகவைத்த பாசுமதி சாதம் சேர்த்து மீண்டும் கிளறி நெய் சேர்த்து மூடி விடவும் அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும் பிறகு பரிமாறலாம்
  4. சுவையான ஈஸியான ஹெல்தியான பருப்பு சாதம் தயார்
  5. இதில் காரம் கம்மியாக சேர்த்துள்ளதால் பருப்பு நெய் சேர்த்துள்ளதால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் lunch box ரெசிப்பியாக குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்