வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி மற்றும் பாலக் கீரை கூட்டு

Photo of Rotti with PALAK SABJI by Deepa Srivatsan at BetterButter
313
0
0.0(0)
0

சப்பாத்தி மற்றும் பாலக் கீரை கூட்டு

Aug-25-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி மற்றும் பாலக் கீரை கூட்டு செய்முறை பற்றி

பாலக் கீரையில் பருப்பு சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாலக்கீரை -1 கட்டு (பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
  2. பாசிப்பருப்பு -ஒரு கரண்டி
  3. துவரம்பருப்பு -ஒரு கரண்டி
  4. வெங்காயம் -2 (பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
  5. தக்காளி- 2 (பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
  6. உருளைக்கிழங்கு -1 (வேக வைத்துக் கொள்ளவும்)
  7. மிளகாய்வற்றல்- 2
  8. சாம்பார் பொடி -1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. கடுகு அரை டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  13. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை வேக வைத்து நன்றாக மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை குக்கரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்
  4. நன்றாக வதங்கியதும் மசித்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்க்கவும்
  5. பின்பு மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சாம்பார் பொடி பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. ஐந்து நிமிடம் அனைத்தும் சேர்ந்து கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்