வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் மொச்சை காரக்குழம்பும் அவித்த முட்டையும்

Photo of Brinjal Mochai Kara Kuzhambu and boiled egg by Jayasakthi Ekambaram at BetterButter
380
1
0.0(0)
0

கத்திரிக்காய் மொச்சை காரக்குழம்பும் அவித்த முட்டையும்

Aug-26-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் மொச்சை காரக்குழம்பும் அவித்த முட்டையும் செய்முறை பற்றி

கத்தரிக்காயும் மொச்சையும் சேர்த்து செய்யும் காரக்குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி எலுமிச்சை அளவு
  2. கத்திரிக்காய் 3
  3. காய்ந்த மொச்சை 100 கிராம்
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி-2
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. வெந்தயம் கால் ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை ஒரு கொத்து
  12. குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  13. பூண்டு 15 பற்கள்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. பூண்டை உரித்து கொள்ளவும்
  3. கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டி உப்பு தண்ணீரில் போடவும்
  4. புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்
  5. மொச்சையை இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  7. கடுகு சீரகம் வெந்தயம் போட்டு தாளிக்கவும்
  8. வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
  9. பூண்டு சேர்த்து வதக்கவும்
  10. அடுத்தது தக்காளியைப் போட்டு கூழாகும் வரை வதக்கவும்
  11. கத்தரிக்காயை போட்டு வதக்கவும்
  12. இதனை மூடி போட்டு சிறு தீயில் வைத்து அவ்வப்போது வதக்கி விடவும்
  13. கத்திரிக்காய் நன்றாக வதங்கிய பின் புளித் தண்ணீரை ஊற்றவும்
  14. மிளகாய்த் தூள் உப்பு தூள் போட்டு கொதிக்க விடவும்
  15. வேகவைத்த மொச்சையை தண்ணீருடன் சேர்க்கவும்
  16. அது நன்றாக கொதித்த பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்
  17. காய் நன்றாக வெந்து குழம்பு கெட்டிப்பதம் ஆன உடன் அடுப்பை ஆப் செய்யவும்
  18. வெள்ளை சாதம் செய்து அதன் மேல் இந்த குழம்பை ஊற்றி டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்
  19. குழம்பின் மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்
  20. முட்டையை அவித்து சைட் டிஷ் ஆக கொடுத்தனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்