வீடு / சமையல் குறிப்பு / திணைமாவு கார கொழுக்கட்டை

Photo of Thinaimaavu Kara Kozhukattai by Sowmya Sundar at BetterButter
238
2
0.0(0)
0

திணைமாவு கார கொழுக்கட்டை

Aug-26-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணைமாவு கார கொழுக்கட்டை செய்முறை பற்றி

திணைமாவில் காரட் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து செய்த கார கொழுக்கட்டை.ஆவியில் வேக வைப்பதால் டிபன் பாக்ஸில் வைத்தனுப்ப ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணைமாவு ஒரு கப்
  2. தண்ணீர் ஒரு கப்
  3. காரட் துருவல் கால் கப்
  4. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கடுகு ஒரு டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. மிளகாய்வற்றல் 2
  10. இஞ்சி, பச்சைமிளகாய் விழுது அரை டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் திணைமாவை சூடாகும் வரை வறுத்துக் எடுத்து கொள்ளவும்
  2. அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு,இஞ்சி பச்சை மிளகாய் விழுது, காரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்
  3. கொதித்ததும் திணைமாவை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்
  4. இட்லி தட்டில் மாவை நீளவாக்கில் உருட்டி வைத்து ஆவியில் பத்து நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும்
  5. டிபன்பாக்ஸில் பேக் செய்ய திணைமாவு கார கொழுக்கட்டை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்