வீடு / சமையல் குறிப்பு / அசத்தும் அசைவலன்ச்பாக்ஸ்( அலுவலகத்தில் சுவைக்க)

Photo of Easy taste non-veg lunch box by Karuna Pooja at BetterButter
849
1
0.0(0)
0

அசத்தும் அசைவலன்ச்பாக்ஸ்( அலுவலகத்தில் சுவைக்க)

Aug-26-2018
Karuna Pooja
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அசத்தும் அசைவலன்ச்பாக்ஸ்( அலுவலகத்தில் சுவைக்க) செய்முறை பற்றி

அசைவம் சாப்பிடுபவர்களை அசத்தும் வகையில் சிறப்பு லஞ்ச் பாக்ஸ் காக செய்யப்பட்ட உணவு வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோழி இறைச்சி 2½ கிலோ
  2. மீன் ஒரு கிலோ
  3. பெரிய வெங்காயம் 300 கிராம்
  4. தக்காளி கால் கிலோ
  5. பச்சைமிளகய் 50 கிராம்
  6. பிரியாணி அரிசி ஒரு கிலோ
  7. கரம் மசாலா 3 தேக்கரண்டி
  8. சீரகப் பொடி 2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
  10. தயிர் ஒரு கப்
  11. தேவையான அளவு
  12. புதினா 2 கைப்பிடி
  13. மல்லி 2 கைப்பிடி
  14. மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
  15. 100 கிராம்
  16. எண்ணெய் 1/4 லிட்டர்
  17. தண்ணீர் தேவையான அளவு
  18. பச்சை மிளகாய் 75 கிராம்
  19. கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
  20. இஞ்சி பூண்டு விழுது
  21. மல்லிவிதை சிறிதளவு
  22. காய்ந்த மிளகாய் 4
  23. மிளகு ஒரு தேக்கரண்டி
  24. சீரகம் அரை தேக்கரண்டி
  25. சோம்பு அரை தேக்கரண்டி
  26. பட்டை ஒரு சிறிய துண்டு
  27. கிராம்பு ஒரு 3
  28. ஏலக்காய் 4
  29. பிரியாணி சாமான்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தைத் நீளவாக்கில் தனியாகவும் , பொடியாக நறுக்கி தனியாகவும் வைக்கவும்...
  2. இரண்டையும் தனி தனியாவைக்கவும்
  3. மீனை சுத்தமாக கழுவி, மஞ்சள், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது எழுமிச்சை சாறு போன்றவை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும்.
  4. சிக்கனில் சதைப் பகுதிகளை மட்டும் எடுத்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து முள் கரண்டியால் நன்கு கலந்து தனியே வைக்கவும்.
  5. மீதமுள்ள கோழி இறைச்சியை இரண்டாகப் பிரித்து, பிரியாணியில் சேர்கவுள்ள இறைச்சியி தயிர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை ஏலக்காய் பட்டை கிராம்பு போன்றவற்றை பொரித்து
  7. பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  8. கரம் மசாலா ,மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,போன்றவற்றை சேர்த்து வதக்கவும்
  9. ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும்
  10. நன்கு எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  11. நன்கு கொதித்த பிறகு 10 நிமிடம் ஊற வைத்த பிரியாணி அரிசியை சேர்க்கவும்
  12. அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றி வரும் போது தம் வைக்கவும்
  13. கடாய் சிக்கன் செய்வோம் .. ஒரு கடாயில் எண்ணெய் சிறிது விட்டு மல்லி வரமிளகாய் சோம்பு சீரகம் ,மிளகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்
  14. ஆறிய பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  15. அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பொரிய விடவும்
  16. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  17. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  18. பூண்டு இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  19. தக்காளி சேர்த்து வதக்கவும்
  20. சிக்கன் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு உடனே சேர்த்து வதக்கவும்
  21. அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வறுக்கவும்
  22. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு
  23. எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  24. மீனை பொரிக்கவும்
  25. சிக்கன் துண்டுகளை பொரிக்கவும்
  26. சிக்கன் பொன்னிறமாகும் வரை நன்கு வேகவிட்டு எடுக்கவும்
  27. அசத்தும் அசைவ லஞ்ச் பாக்ஸ் தயார்
  28. இது அசைவ பிரியர்களுக்கு அசத்தும் மிகச்சிறந்த லஞ்ச் பாக்ஸ்
  29. மேலேயுள்ள தேவையான அளவு பொருட்கள் 6 லன்ச் பாக்ஸிற்கு உண்டானது.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்