வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் தந்தூரி பிரான்கீ

Photo of Chicken tandoori frankie by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
342
1
0.0(0)
0

சிக்கன் தந்தூரி பிரான்கீ

Aug-26-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் தந்தூரி பிரான்கீ செய்முறை பற்றி

சிக்கன் மற்றும் தொட்டியில் செய்யப்படும் ஒரு வகை ரோல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒன்றரை கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் மாவு பிசைவதற்கு தேவையான அளவு
  4. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் 300 கிராம்
  5. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  6. எலுமிச்சம்பழச் சாறு ஒரு டீஸ்பூன்
  7. தந்தூரி மசாலா தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய பூண்டு 2 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் சிறிது
  11. வெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ரொட்டி செய்வதற்கு மைதா உப்பு தண்ணீர் விட்டு கெட்டியாக உருண்டையாக பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்
  2. தந்தூரி செய்வதற்கு சிக்கன் துண்டுகள் எலுமிச்சம்பழச் சாறு தயிர் உப்பு தந்தூரி மசாலா சிறிது காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்
  3. தந்தூரி செய்வதற்கு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்
  4. பூண்டு பொன்னிறமாக ஆனதும் அதில் ஊறிய சிக்கனை பரவலாக போட்டு நன்றாக வேக விடவும்
  5. குறைந்த தீயில் சிக்கனை நன்றாக வேக விட்டு எடுக்கவும் தண்ணீர் சேர்க்கக் கூடாது
  6. ரொட்டி செய்வதற்கு ஊறிய மாவை சிறிது எடுத்து நீளவாக்கில் தேய்க்கவும்
  7. அதன் மேல் நெய்யை தடவி மைதா மாவை தூவவும்
  8. அதை இரண்டாக மடிக்கவும்
  9. பின்னல் போல சுருட்டவும்
  10. அப்படியே சுருட்டி உருண்டையாக பிடிக்கவும்
  11. மீண்டும் சப்பாத்தி போல தேய்க்கவும்
  12. சூடான தவாவில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுடவும்
  13. ஒரு புறத்தில் ஒரு முட்டையை ஊற்றி பரப்பி விடவும்
  14. முட்டை ஊற்றிய பக்கத்தைத் திருப்பி போட்டு மீண்டும் நன்றாக வேக விடவும்
  15. வேக வைத்துள்ள ரொட்டியை ஒரு தட்டில் வைத்து தந்தூரி சிக்கனை அதன் நடுவில் வைக்கவும்
  16. சிக்கனின் மேல் நீளமாக நறுக்கிய வெங்காயம் புதினா சட்னி வைத்து ரோல் செய்து பரிமாறவும்
  17. குழந்தைகளுக்கு பிடித்தமான தந்தூரி சிக்கன் பிரான்கீ (ரோல்) ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்