வீடு / சமையல் குறிப்பு / தேசி ஸ்டைல் பிரேக் ஃபாஸ்ட் மப்பின்

Photo of English breakfast muffin platter from the Indian home by Pinky Srini at BetterButter
479
2
0.0(0)
0

தேசி ஸ்டைல் பிரேக் ஃபாஸ்ட் மப்பின்

Aug-27-2018
Pinky Srini
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேசி ஸ்டைல் பிரேக் ஃபாஸ்ட் மப்பின் செய்முறை பற்றி

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வீட்டு பெண்கள் மீதமுள்ள உணவை கொண்டு ஈஸியாக செய்ய மப்பின் ப்ளேட்டர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • அமெரிக்கன்
  • மைக்ரோவேவிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மசாலா காளிப்ளர் பன்னீர் மப்பின் :
  2. எண்ணெய் 1tsp
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகு தூள் 1/4tsp
  5. சாம்பார் (அ) கரி மசாலா பவுடர்
  6. காளிப்ளார் வேக வைத்து 1tsp
  7. பன்னீர் 1/4 கப்
  8. வெஜ் ஃப்ரைட் ரைஸ் மப்பின் :
  9. எண்ணெய் 1tsp
  10. மிளகு தூள் 1/4tsp
  11. உப்பு தேவையான அளவு
  12. வேக வைத்த காய் கறிகள் : 2tsp
  13. ஆர வைத்த சாதம் 1/2 கப்
  14. சேஷுவான் நூடுல்ஸ் மப்பின் :
  15. எண்ணெய் 1tsp
  16. பூண்டு 1/2tsp
  17. சேஷுவான் சாஸ் : 1tsp (இல்லையேல் மிக்ஸியில் 2 வரமிளகாய் 4 பூண்டு 1ஸ்பூன் வின்கர் 1ஸ்பூன் சோயா சாஸ உப்பு சேர்த்து அரைத்து கொள்ளலாம்)
  18. வேக வைத்த நூடுல்ஸ் :1/4cup
  19. மேக் & சீஸ் மப்பின் :
  20. பிசா பவுடர் 1/2tsp
  21. மிளகு தூள் 1/4tsp
  22. சீஸ் 2tbsp
  23. மேக்ரோநி வேக வைத்து 1/4கப்
  24. ரொட்டி கஸ்டர்டு மப்பின் :
  25. சர்க்கரை 1tbsp
  26. வெண்ணிலா சிருப் 1/8tsp
  27. உலர்ந்த திராட்சை 1/2tsp
  28. ரொட்டி பீஸ் 1
  29. மிக்ஸ் வெஜ்ஜி மப்பின் :
  30. உப்பு தேவைக்கு ஏற்ப
  31. பிஸ்ஸா பவுடர் 1/2tsp
  32. மிளகு தூள் 1/2tsp
  33. வேக வைத்த காய் கறிகள(கேரட் பீன்ஸ் உருளை பட்டாணி) 1/4கப்
  34. பஞ்சாபி சொலே மப்பின்:
  35. எண்ணெய் 1tsp
  36. உப்பு தேவையான அளவு
  37. இஞ்சி பூண்டு விழுது 1/2tsp
  38. வெங்காயம் 1 சிறியது
  39. தக்காளி பொடியாக நறுக்கியது 2tbsp
  40. கொண்டைக்கடலை 1/4 கப் வேகவைத்து
  41. சொலே மசாலா பவுடர் : 1+1 tbsp
  42. மப்பின் மிகிஸ் :
  43. உருக்கிய வெண்ணெய் 1/4கப்
  44. முட்டை 1
  45. சோடா உப்பு 1/2tsp
  46. மோர் 1/2 கப்
  47. மைதா 3/4கப்
  48. பிற பொருட்கள் :
  49. முட்டை 3
  50. உப்பு மிளகு தூள்
  51. எண்ணெய் 1tbsp
  52. பட்டர் : 1tbsp
  53. எலுமிச்சை 1
  54. கொதம்மலி 1/4கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
  2. பின் அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் சொலே 1tspபவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் தெளிக்கவேண்டும்
  3. பின் அதில் கொண்டகடலை சேர்த்து வதக்கி எலுமிச்சை கொத்தமல்லி சேர்க்கவும்
  4. அடுத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பூண்டு சேர்க்கவும்
  5. பின் சேஷிவான் சாஸ் கலந்து சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும்
  6. வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு பிரட்டி உப்பு காரம் சரி பார்த்து கொத்தமல்லி சேர்க்கவும்
  7. மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கறி மசாலா மிளகு தூள் சேர்த்து
  8. அதில் பிசைந்த பன்னீர் காளி பிளவர உப்பு் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்
  9. மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு காய் கறிகள் சேர்த்து சிறிது சோயா சாஸ் சேர்க்கவும்
  10. பின் அதில் சாதம் உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்
  11. வதக்க வேண்டியவை முடிந்தது
  12. அடுத்து மப்பின் சேர்வை : (மைதா சேர்த்து)
  13. ஒரு பாத்திரத்தில் சோடா உப்பு மற்றும் மைதாவை சலித்து கொள்ளவும்
  14. இன்னொரு பாத்திரத்தில் மோர் உருக்கிய வெண்ணை(சூடு இல்லாமல்) ஒரு முட்டை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
  15. இப்பொழுது இரண்டையும் பிசிரு இல்லாமல் கலந்து கொள்ளவும்
  16. ஓவன் 180c செட் செய்து பிரி ஹீட் செய்யவும்
  17. மப்பின் ட்ரே எண்ணெய் விட்டு ப்ரஸ் செய்யவும்
  18. ஒவ்வொரு 3tbsp சேர்வைக்கும் 2tbsp சோலே அல்லது மிக்ஸ் வெஜ் (பிஸ்ஸா சீசன்நிங் சேர்க்கவும்) அல்லது மசாலா பன்னீர் அல்லது கட் செய்த ரொட்டி (வெண்ணிலா சீனி சேர்த்து கொள்ளவும்) சேர்த்து தனி தனியாக மிக்சு செய்து கொள்ளவும்
  19. அதை டிரேயில் முக்கல் பாகம் நிரப்பி கொத்தமல்லி சிறிய வெண்ணை துண்டு மேலே சேர்க்கவும்
  20. ஓவனில் 15 -20 நிமிடம் பிறகு கத்தியால் செக் செய்து நன்கு ஒட்டாமல் வந்தால் எடுக்கவும்
  21. மேர் கூறியதன் அளவு (3tbsp சேர்வை + 2tbsp மசாலா) மூலம் ஒவ்வொரு வகையில் 2 மப்பின் கிடைக்கும்
  22. அடுத்து மைதா இல்லாமல் செய்ய :
  23. நூடுல்ஸ், ரைஸ் ,பாஸ்தாவை (சீஸ் பிஸ்ஸா சீசன்நிங் சேர்த்து) முக்கால் பாகம் டிரே யில் நிரப்பவும்
  24. 3முட்டை உடைத்து உப்பு மிளகு தூள் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
  25. இதை மப்பின் டிரே வில் உள்ள நூடுல்ஸ் ரைஸ் பாஸ்டா மீது முழுகும் வரை உற்றவும்
  26. இதன் மேலே சிறிய சிறிய பட்டர் துண்டு வைத்து ஓவனில் 15 - 20 நிமிடம் வைக்கவும்
  27. நன்கு ஆறிய பின்பு குழியில் இருந்து எடுக்கவும். சூடாக எடுத்தால் ஒட்டி கொள்ளும்
  28. இல்லையேல் பேப்பர் கப்பில் ஊற்றி செய்யலாம் சுலபமாக இருக்கும்
  29. இங்கு நான் பல வகையில் ஒரு எடுத்து காட்டாக தான் செய்தேன் .
  30. நீங்கள் இதில் 1 அல்லது 2 வகையில் மட்டும் செய்யலாம்
  31. ஏதேனும் மீதம் இருக்கும் வேளையில் தூளாக நறுக்கிய சிக்கன் மட்டன் கீரை ஸ்வீட் கான் கூட இதை ஈஸி யாக செய்யலாம் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்