வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்

Photo of Pasiparuppu Bread Toast by Sowmya Sundar at BetterButter
188
1
0.0(0)
0

பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்

Aug-27-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு,சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து செய்த வித்யாசமான பிரட் டோஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு அரை கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. இஞ்சி ஒரு துண்டு
  4. சீரகம் அரை டீஸ்பூன்
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/8 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. பிரெட் துண்டுகள் 8
  10. வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிபருப்பை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின் தண்ணீர் வடித்து விட்டு மிக்சியில் சேர்க்கவும்
  2. மிக்ஸியில் அதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து ஊறிய தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிரட்டில் இரு பக்கமும் வெண்ணெய் தடவி ஒரு பக்கம் மட்டும் இந்த பேஸ்ட்டைத் தடவவும்
  4. தவா சூடானதும் பருப்பு பேஸ்ட் தடவிய பக்கம் அடியில் இருக்கும் படி வைத்து மிதமான தீயில் நன்றாக டோஸ்ட் செய்யவும்.பின் மற்றொரு பக்கமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்
  5. சிறிது ஆறியதும் கட் செய்து பாக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்