வீடு / சமையல் குறிப்பு / மினி இட்லி மஞ்சூரியன்

Photo of Mini Idly Manchurian by Munsila Fathima at BetterButter
498
0
0.0(0)
0

மினி இட்லி மஞ்சூரியன்

Aug-27-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மினி இட்லி மஞ்சூரியன் செய்முறை பற்றி

வழக்கமான இட்லிக்கு பதில் இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி மாவு
  2. டொமேட்டோ கேட்சப் 11/2 தேக்கரண்டி
  3. ரெட் சில்லி சாஸ் 1தேக்கரண்டி
  4. சோயா சாஸ் 1/8 தேக்கரண்டி
  5. சோள மாவு 1/4 தேக்கரண்டி
  6. தண்ணீர் 1தேக்கரண்டி
  7. நறுக்கிய பூண்டு 1/4 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கு
  9. குடைமிளகாய் 1
  10. உப்பு தேவைக்கு
  11. வெங்காயத்தாள் மற்றும் அதன் வெங்காயம் சிறிதளவு
  12. சின்ன வெங்காயம் நறுக்கியது 1/8 கப்
  13. மிளகுத்தூள் 1/4 தேக்கரண்டி
  14. கடலையெண்ணை 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி 15 இட்லி வருமாறு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  2. பின்பு அதனை ஒரு தேக்கரண்டி அளவு பட்டர் சேர்த்து இரு புறமும் பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
  3. பின்பு பேனில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பூண்டு சற்று வதக்கி வெங்காயம் ,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின்பு டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும்.
  6. சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்க்கவும்
  7. பின்பு பொறித்த இட்லியை அதனுடன் சேர்த்து ட்ரை ஆகும் வரை பிரட்டவும்.
  8. இறுதியில் மிளகுதூள், வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்