வீடு / சமையல் குறிப்பு / சீரக சம்பா காய்கறி பிரியாணி

Photo of SEERAGA SAMBA VEGETABLE BIRYANI by Divya  at BetterButter
6350
28
4.5(0)
0

சீரக சம்பா காய்கறி பிரியாணி

Jun-17-2016
Divya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அரிசி - 1 கப்
  2. காய்கறி கலவைகள் - (கேரட், பீன்ஸ், பட்டாணி, காளிபிளவர், உருளைக்கிழங்கு) - 1 கப்
  3. வெங்கயம் - 2 எண்ணிக்கை நறுக்கப்பட்டது
  4. தக்காளி - 2 எண்ணிககை நறுக்கப்பட்டது
  5. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாயத் தூள் - 1தேக்கரண்டி
  7. மல்லி பொடி - 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  10. தயிர் - 1/2 கப்
  11. இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பே இலைகள் கொஞ்சம்
  12. புதினா இலைகள் - கொஞ்சம்
  13. உப்பு
  14. நெய் + எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பே இலைகள், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், புதினா இலை, தயிர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். சீரக சம்பா அரிசியை 1 1/2 கப் தண்ணீரோடும் 1 தேக்கரண்டி நெய்யோடு ஒரு பிரஷர் குக்கரில் 2 விசில்களுக்கு வேகவைக்கவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரில் 2 விசில்களுக்கு வேகவைத்து கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. நெய் + எண்ணெய்யை கடாயில் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். அடுத்து தயிர் கலவையை அதனில் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. வேகவைத்தக் காய்கறிகள், உப்பு ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கலந்துகொள்ளவும், குழம்பு அடர்த்தியாகும் வரை வேகவைக்கவும்.
  5. சாதத்தைச் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். உப்பு சரிபார்க்கவும்.
  6. அலங்கரித்து, ரைத்தா சிப்சுகளோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்