வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் லன்ச்

Photo of Simple lunch by hajirasheed haroon at BetterButter
527
3
0.0(0)
0

சிம்பிள் லன்ச்

Aug-27-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் லன்ச் செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் சோறு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  2. பாஸ்மதி அரிசி 1ஆளாக்கு
  3. நெய் 100மில்லி
  4. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  5. சிக்கன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  6. சிக்கன் 1/2கிலோ
  7. வெங்காயம் 3
  8. தக்காளி 2
  9. இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  12. கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
  13. தனியா தூள் 1ஸ்பூன்
  14. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. சோயா வருவல் செய்ய தேவையான பொருட்கள்
  18. சோயா 100 கிராம்
  19. 65பவுடர் 1பாக்கெட்
  20. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  21. உப்பு தேவையான அளவு
  22. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நெய் சோறு செய்வதற்கு அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் சரியான அளவு தண்ணீர் ஊற்றி அரிசி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. சிக்கன் கிரேவி செய்வதற்கு சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்
  4. தக்காளியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த தக்காளி விழுது சிக்கன் கலவையினை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்துவிடவும்
  5. சுவையான சிக்கன் கிரேவி தயார்
  6. சோயா 65 செய்வதற்கு சோயாவை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்
  7. சோயா துண்டுகளில் சிக்கன் 65 பவுடர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. சுவையான சிம்பிளான லன்ச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்