வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பனீர் சப்பாத்தி ரோல்

Photo of Vegitable paneer chapathi roll by Krishnasamy Vidya Valli at BetterButter
539
1
0.0(0)
0

வெஜிடபிள் பனீர் சப்பாத்தி ரோல்

Aug-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பனீர் சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கியமான டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/4 கப்
  2. உப்பு 1/8 தேக்கரண்டி
  3. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்
  4. பொடியாக நறுக்கிய காய்கறிகள் அரை கப்
  5. உப்பு காரப் பொடி தலா கால் தேக்கரண்டி
  6. கரம் மசாலா மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி தலா நான்கு சிட்டிகை
  7. பனீர் துருவல் 2 தேக்கரண்டி
  8. கான்ப்ளவர் அரை தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை சிறிது
  10. தாளிக்க எண்ணெய் அரை தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து காய்களை சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகள் சேர்த்து வதக்கி பனீர் துருவல் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  3. கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்
  4. தோசை கல்லில் சப்பாத்தியை எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்
  5. சப்பாத்தியில் செய்துவைத்த வெஜிடபிள் பனீர் கலவையை வைத்து ரோல் செய்து டூத்பிக் உதவியால் குத்தி சீல் செய்து கொள்ளவும்
  6. டிபன் பாக்ஸில் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்