வீடு / சமையல் குறிப்பு / பொரித்த இறால் பிரியாணி

Photo of Fry Prawn biriyani by hajirasheed haroon at BetterButter
235
2
0.0(0)
0

பொரித்த இறால் பிரியாணி

Aug-28-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரித்த இறால் பிரியாணி செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் அரை கிலோ
  2. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  3. வெங்காயம் கால் கிலோ
  4. தக்காளி ஆறு
  5. இஞ்சி 3 ஸ்பூன்
  6. பூண்டு 2 ஸ்பூன்
  7. புதினா மல்லி இலை சிறிதளவு
  8. மிளகாய்த்தூள்-3ஸ்பூன்
  9. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  12. தயிர் கால் கப்
  13. எண்ணை தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு

வழிமுறைகள்

  1. முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் இறால் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்து இறால்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  3. பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி புதினா மல்லி இலை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் தயிர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு ஊற வைத்துள்ள அரிசியை அதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக விடவும்
  5. பிறகு வேக வைத்த அரிசியில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் கிளறி பிரியாணியை தம்மில் 10நிமிடம் வைக்கவும்
  6. பொரித்த இறால் பிரியாணி தயார்
  7. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்