வீடு / சமையல் குறிப்பு / கோபி ப்ரைடு ரைஸ்

Photo of Gobi Fried Rice by Sowmya Sundar at BetterButter
685
1
0.0(0)
0

கோபி ப்ரைடு ரைஸ்

Aug-28-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

காலிஃப்ளவரில் கோபி 65 செய்து பிறகு அதை பயன்படுத்தி செய்த ஃப்ரைட் ரைஸ்.குழந்தைகளுக்கு பிடித்தமானது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் ஒரு கப்
  2. காலிஃப்ளவர் பூக்கள் அரை கப்
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. வெங்காயம்-1
  5. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது ஒரு டீஸ்பூன்
  6. கேரட், காப்சிகம்,கோஸ் சேர்த்து 1/8 கப்
  7. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய்-1 குழிகரண்டி
  11. மாரிக்னேட் செய்ய
  12. மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
  13. கார்ன் ஃப்ளோர் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  15. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  16. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  17. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  18. ஆம்சூர் பொடி கால் டீஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காலிஃபிளவர் பூக்களை ஐந்து நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்
  2. மாரிக்னேட் செய்யக் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  3. வடிகட்டிய காலிஃப்ளவர் பூக்களை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு இதை போட்டு நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை சிம்மில் வைத்து கிளறி கொடுக்கவும் .ஒவ்வொரு பூக்களாக பொரித்தும் எடுக்கலாம்.
  5. மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் மற்ற காய்கறிகள், மிளகு தூள்,உப்பு,கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதங்கியதும் சாதம் கோபி 65 சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்